16 Dec 2022

சுத்த பேதம்

சுத்த பேதம்

நகரத்தின் இலவச கழிவறை

நாற்றமுடைத்ததாய் இருக்கிறது

கழிவறையைச் சுற்றிலும்

கழிவறை இருக்கைகள் இருந்ததன் தடம்

கண்ணில் தெரியும் முன்

காற்றில் கலந்து கட்புலனில் தெரிகிறது

மக்கள் அசுத்தமுடைத்தோரோ

கழிவறை அசுத்தமுடைத்தோ

இலவசம் அசுத்தமுடைத்தோ

கட்டண கழிவறையின் கல்லாக்கள்

அசுத்த பேதமின்றி நிரம்பிக் கொண்டிருக்கின்றன

சுத்தபத்தமாய்

*****

No comments:

Post a Comment