11 Dec 2022

வாழாத வாழ்க்கையும் வாழக் கூடாத வாழ்க்கையும்

வாழாத வாழ்க்கையும் வாழக் கூடாத வாழ்க்கையும்

சொற்கள் சிதறும்

கனவுப் புணர்ச்சியில்

நிகழ்வுகள் ஒரு விளையாட்டு

கலைத்துப் போடப்பட்ட சீட்டுக்கட்டு

பாம்பொன்று துரத்துகையில்

கால்கள் கட்டப்பட்டு விடுகின்றன

நாயொன்று துரத்தும் போது

அசைவற்று நிலைகுத்து நிற்கிறது உடல்

கனவில் குத்துப்படுதல் புரியாமல்

நினைவில் விழித்து அழுகின்றன கண்கள்

கனவில் கூடியோரின் எண்ணிக்கை கேட்டு

பிரசவமான பிள்ளைகள் அழுகின்றனர்

கெட்டவரின் வேஷம் கலைத்து

நல்லவராக விழித்தெழுகிறேன்

வாழாத வாழ்க்கை

வாழக் கூடாத வாழ்க்கை என்றிருக்கிறதா

என்றெதும் இல்லை என்று

கனவுக்குள் தள்ளி

கதவடைத்துப் போகிறார் கடவுள்

கடவுளைக் கொல்லும் வெளியோடு

கனவில் அலைந்து கொண்டிருக்கும்

கொலைகாரர் யாராகவும் இருக்கலாம்

*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...