11 Dec 2022

பிரியங்களின் கசாப்புக்கடைக்காரர்

பிரியங்களின் கசாப்புக்கடைக்காரர்

நேற்று நாம் யாருக்கும் தெரியாமல் சந்தித்தோம்

யாருக்கேனும் தெரிந்தால்

உன்னையோ என்னையோ

நிச்சயம் ஒருவரைக் கொன்று விடுவார்கள்

சாவில் கூட சேர்த்து கொல்ல மாட்டார்கள்

நல்லது நாம் யாருக்கும் தெரியாமல் சந்தித்துக் கொள்வோம்

நாம் ஏன் கொலைகாரர்களை உருவாக்க வேண்டும்

நம் சந்திப்பின் பிரியங்களை

அவர்களுக்குப் பரிமாற முடிந்தால்

எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்

ஆடுகள் அளிக்கும் பிரியங்களை

கண்டம் துண்டம் ஆக்கி விடும்

கசாப்புக்கடைக்காரர்களுக்குப்

பிரியங்களின் ஒரு கிலோ அரை கிலோ பார்சல்களில்

ஓடிக் கொண்டிருக்கிறது வாழ்க்கை

*****

No comments:

Post a Comment