17 Nov 2022

புத்தகங்களை வாசிப்பவர்கள் நடைமுறை மனிதர்களையும் வாசிக்க வேண்டும்

புத்தகங்களை வாசிப்பவர்கள் நடைமுறை மனிதர்களையும் வாசிக்க வேண்டும்

நீங்கள் பார்க்கும் நிறைய மனிதர்கள் புத்தகம் படிப்பதில் ஆர்வம் அற்றவர்களாகத்தான் இருப்பார்கள். அநேகமாகப் பள்ளிப் படிப்போடு அல்லது கல்லூரிப் படிப்போடு படிப்பதையே நிறுத்தியவர்களாகவும் இருப்பார்கள்.

படிப்பவர்களின் பட்டியலை உருவாக்க நினைத்தால் அன்றாட நாளிதழ்களைப் படிப்பவர்கள், புலனாய்வு இதழ்களைப் படிப்பவர்கள், முகநூலில் படிப்பவர்கள், புலனத்தில் படிப்பவர்கள் என்று பலதரப்பட்ட படிப்பாளர்களைப் பார்க்க முடியும்.

புத்தகங்களை வாங்கி வைத்துப் படிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைவாகத்தான் இருக்கும்.

புத்தகங்களை வாசிப்பவர்கள் குறைவு என்பதால் வாசிக்காதவர்கள் முட்டாள்கள் என்று முடிவு கட்டி விட முடியாது. எழுதப்படும் புத்தகங்கள் அனைத்திற்கும் எதுவும் வாசிக்காத மனிதர்கள் கருப்பொருளாக இருக்கிறார்கள். எழுதப்படும் புத்தகங்களுக்குச் செய்திகளை வழங்குபவர்களாகவும் இருக்கிறார்கள்.

புத்தகத்தை வாசித்துத் தெரிந்து கொள்வதை அன்றாட வாழ்வில் பழகியும் அனுபவித்தும் அறிந்து கொள்பவர்கள் அதிகம்.

புத்தகம் வாசிப்பவர்கள் வாசிக்காதவர்களைத் தரக்குறைவான மனிதர்களைப் பார்ப்பது போலப் பார்த்து விடக் கூடாது. அவர்களே ஒரு எழுதப்படாத புத்தகம் போல இருப்பார்கள். அவர்களிடம் உரையாடியும் பழகியும் தெரிந்து கொள்ளக் கூடிய செய்திகள் வாசிப்பனுபவத்தைக் கடந்ததாகவும் வாசிப்பனுபவத்தை விட உயர்ந்ததாகவும் இருக்கும்.

இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால்,

புத்தகம் வாசிப்பவர்கள் இப்படி நடைமுறை மனிதர்களை வாசிக்கவும் தவறி விடக் கூடாது.

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...