யாருக்காக விரைதல்
தெருக்களில் வேகமாய்ச் செல்பவர்கள்
நெடுஞ்சாலைகளில் மெதுவாகச்
செல்கிறார்கள்
சிக்னல்களில் சீறும் வாகனங்கள்
வெறிச்சோடிய சாலையில் அமைதியாகச்
செல்கின்றன
எங்களுக்குத் தெரியாமல் என்ன
நீங்கள் வேகம் காட்ட கூட்டம்
வேண்டும்
மோதுவதற்கு யாரேனும் இல்லாமல்
விபத்துதான் நடக்குமா என்ன
எங்கள் எல்லார் காதுகளுக்காகவும்
நீங்கள் ஹாரன் வாங்கி வைத்திருப்பதும்
நாங்கள் வியக்க வேண்டும்
என்பதற்காக
நீங்கள் வேகமாகச் செல்வதும்
ஓர் ஆக்சிடெண்ட் ஆனால்
உங்களுக்காக நாங்கள் உச்
கொட்டுவோம் என்பதும்
நீங்கள் நன்கு அறிந்ததுதான்
*****
No comments:
Post a Comment