ஆம்பளையோட சேர்ந்த ஆம்பளை!
செய்யு - 589
பொம்பள புள்ளைங்க மனசெ தொறந்து பேச ரொம்ப
யோசிக்குமுங்க. அந்த யோசனெயும் தயக்கமும்தாம் அதுங்களோட மனஉளைச்சலுக்கும் சரியா ஒரு
முடிவுக்கு வர முடியாததுக்கும் காரணமாவும் அமைஞ்சிடும். அதெ நேரத்துல அதுக மனசெ தொறந்து
பேச ஆரம்பிச்சிட்டா பேசிக்கிட்டெ இருக்குமுங்க. எத்தனெ காலமா அமுக்கி வெச்சிருந்த மனஅழுத்தமோ,
அத்தனெயும் அது பாட்டுக்கு வந்து வுழுந்துகிட்டெ இருக்கும். அப்படி பொம்பளெ புள்ளைங்கள
மனசு வுட்டு பேச வைக்குறது சாதரணமும் இல்ல. அதுக்கான நெருக்கடியும் நிர்ப்பந்தமும்
வந்து பேசுறவங்க பதனமா பேசுறப்பத்தாம் அதுவும் சாத்தியமாவும். செய்யு சொல்ல சொல்ல
பாலாமணியப் பத்திப் புதுப்புதுக் கதையா வந்து விழுந்துகிட்டெ இருந்துச்சு.
"தோலாமணியப் பத்தித்தானே சொன்னே
நல்லவேம்ன்னு! அவ்வேம் எவ்வளவு நல்லவேம்ங்றதெச் சொல்றேம் பாரு! அப்பத்தாம் ஒனக்குத்
தெரியும். எனக்குன்னுப் போயி கட்டி வெச்சீயளே ஒரு நாதாரிப் பயெ மவனெ! அவ்வேம் முழு
ராத்திரியும் ரூமுக்குள்ள வந்துப் படுக்கணும்ன்னா அன்னிக்கு பாக்குக்கோட்டையிலேந்து
யாத்தாவோ, தாத்தாவோ வந்திருக்கணும். அப்பிடி வந்திருந்தாத்தாம் ரூமுக்குள்ளயே படுத்திருப்பாம்.
யில்லன்ன எப்போ ரூமெ வுட்டுட்டுப் போயி ஹால்ல படுத்திருப்பான்னே சொல்ல முடியாது.
ரூமுக்குள்ளப் படுக்கிறப்பவும் பாத்தீயன்னா கட்டில்ல படுக்க மாட்டாம். ஒரு போர்வைய
எடுத்துப் போட்டுட்டு தரையிலத்தாம் படுப்பாம். சொல்றதுக்கே கூச்சமா இருக்குண்ணா!
என்னெத்தச் சொல்றது போ! எங் கதெ இப்பிடியாயிடுச்சே!
என்னிக்காகவது அதிசயமா ரொம்ப நல்லவேம்
போல, நல்ல புருஷங்காரனப் போல கட்டில்ல வந்து படுப்பாம். யப்போ பாத்தீன்னா கலர் கலரா
என்னென்னவோ மாத்திரைகளப் போடுவாம். எதுக்கு இம்மாம் மாத்திரைன்னு கேட்டா போதும்,
அப்பத்தாங் கொழந்தெ நல்ல பொறக்கும்பாம், இந்த மாதிரி மாத்திரைகளச் சாப்புடாமத்தாம்
பல பேத்துக்குக் கொழந்தைக நல்ல வெதமா பொறக்காமப் போயிடுதும்பாம். அவ்வேம் மாத்திரையப்
போடுறதோட வுடாம நமக்கும் வேற மாத்திரையப் போடச் சொல்லி டார்ச்சரு பண்ணித் தொலைவாம்.
ஒண்ணும் சொல்ல முடியாம அந்த மாத்திரைகளெப் போட்டு முழுங்குவேம். அதுலப் பாத்தீன்னா
அவ்வேம் போடுற மாத்திரைக்கு அவ்வேம் கொட்ட முழிச்சிட்டு இருப்பாம். நமக்குப் பாத்தீன்னா
தூக்கம் தூக்கமா வரும். அவ்வளவு வேலையையும் பண்ணிப்புட்டு இன்னிக்கு ரொம்ப களைப்பா
இருக்கே போலருக்கு. நல்லா ரெஸ்ட்டு எடுன்னு சொல்லிட்டு பக்கத்துல கெடப்பாம் செத்துப்
போன சவத்தெ போல. கட்டில்ல படுத்தெல்லாம் கொழந்தெ பெத்துக்கிட முடியாத சாமியாருப்
பயலா போயிட்டாம்ண்ணே அவ்வேம்! அதெப் பத்திக் கூட நாம்ம பெரிசு பண்ணலண்ணே!
ஆன்னா அந்தப் பயெ பண்ண ஒரு காரியம் இருக்கே!
அதெ நெனைக்க நெனைக்கத்தாம் நெஞ்செல்லாம் வேகுதுண்ணே! அந்தப் பயெ மூஞ்செ முறுக்கிக்கிட்டுத்
தரையில படுக்குற நாள்லப் பாத்தீன்னா, நாம்ம அசந்து தூங்குற வரைக்கும் தரையில படுத்திருப்பாம்.திடீர்ன்னு
முழிப்பு வந்தா தரையில போர்வெதாம் கெடக்கும். ஆளெ காங்க முடியாது. எங்கப் போயிட்டாம்ன்னு
நெனைச்சி ரூமோட கதவெத் தொறந்தா அத்து வெளிப்பக்கமா தாழ்ப்பாளப் போட்டிருக்கும்.
படபடன்னு கதவெ தட்டுனா ரண்டு மூணு நிமிஷம் கழிச்சி வந்துக் கதவெ தொறப்பாம். எஞ்ஞப்
போயிட்டீயேன்னா தூக்கம் வாரல, அதாங் காத்தோட்டமா வெளியில சித்தெ நேரம் உலாத்திட்டு
இருந்தேம்பாம். அதுக்கு ஏம் கதவெ வெளித்தாழ்ப்பாளு போட்டீயன்னா எவனாச்சும் உள்ளார
பூந்துடக் கூடாதும்பாம். அதாங் நீஞ்ஞ வெளியில நிக்குதீயே! ஹால்ல தோலாமணி படுத்திருக்கு.
வெளியில கேட்டு ரண்டு பூட்டியிருக்கு. இதெத் தாண்டி எவ்வேம் உள்ளார வந்துப்புடுவாம்ன்னு
கேட்டா, பட்டணத்துல நடக்குறதெப் பத்தில்லாம் புரியாது ஒமக்கும்பாம். அப்பிடித்தாம்
பூட்டிட்டு பாதுகாப்பா இருக்கணும்பாம். இதெப் போயி என்னத்தெ சொல்றது கருமம்ன்னு நாமளும்
அதெ அப்பிடியே வுட்டுப்புடுவேம். இருந்தாலும் மனசுக்குள்ள ஒரு தவிப்பாவே இருக்கும்ண்ணே!
நடுராத்திரியில இந்தப் பயெ எழும்பி எஞ்ஞப் போறாம்ண்ணே?
சில நாள்ல நாம்ம முழிச்சிப் பாக்குறப்பா
தரையில ஆளு காங்காம இருக்குறதெப் பாத்துட்டு நாமளும் மறுக்கா அசந்து தூங்கிடுறது உண்டு.
அதிகாலையில முழிப்பு வர்றப்போ பாத்தா தரையில படுத்திருப்பாம். வர்ற வர்ற அவ்வேம் நடவடிக்கையில
நமக்கு சந்தேகம் அதிகமாயிட்டேப் போயிட்டு இருந்துச்சுண்ணே! என்னத்தெ பண்ணுறதுன்னும்
நமக்குத் தெரியல.
ஒரு நாளு அப்பிடித்தாம் அவ்வேம் மாத்திரையப்
போட்டுக்கிட்டு நமக்கும் மாத்திரையப் போட்டு வுடப் பாத்தாம். அன்னிக்குன்னுப் பாத்து
நமக்கு மாத்திரையப் போடவே யோஜனயா இருந்துச்சு, எதுக்கு இவ்வேம் மாத்திரையப் போடச்
சொல்லுதாம்ண்ணு? அவ்வேம் கொடுத்த மாத்திரைய நாம்மப் போடல. ஆன்னா போடுறாப்புல ஒரு
நடிப்பு நடிச்சு, கொஞ்ச நேரத்துல கொட்டாயி வர்றப்புல வாய பொளந்துகிட்டு அசந்துத்
தூங்குறாப்புல படுத்தேம். நாம்ம அசந்து தூங்குறமான்னு அடிக்கடிப் பாத்துக்கிட்டே பக்கத்துலயே
பாத்துட்டுக் கெடந்தாம். அவ்வேம் அப்பிடிப் பாக்க பாக்க இதுல ஏதோ விசயம் இருக்கும்ன்னு
மனசுக்குள்ள நெனைச்சிக்கிட்டு நாமளும் தூங்றாப்புலயே படுத்துகிட்டெ இருக்கேம். ஒரு
மணி நேரத்துக்கு மேல ஆயிருக்கும். அப்பத்தாம் அவனோட சந்தேகம் தெளிஞ்சிருக்கும் போல.
நாம்ம அசந்து தூங்குறேம்ங்றதெ அவ்வேம் நம்பிட்டாம். அப்பிடியே கட்டில்லேந்து எழும்பி
பூனை நடெ நடந்து கதவெத் தொறக்கிறாம்.
நாம்மத்தாம் அசந்து தூங்குறோங்ற நெனைப்புல
அவ்வேம் பாட்டுக்கு கதவெ மட்டும் சாத்திப்புட்டு என்னவோ நெனைப்புல அன்னிக்குன்னு வெளித்தாழ்ப்பாளு
போடாமப் போயிட்டாம். அத்து நமக்குத் தெரியுது. நல்லதாப் போச்சுன்னு நாம்ம நெனைச்சிக்கிட்டுப்
படுத்திருந்தேம். ஒடனே போயி கதவெ தொறந்தா ஆளு உஷாரா ஆயிடுவாம்ன்னு நெனைச்சிக்கிட்டு
நாமளும் ஒரு காலு மணி நேரத்துக்கு மேலயே ன்னா ஏதுன்னு யோசிக்கிட்டெ இருந்தேம். அப்புறமா
நாமளும் மெதுவா எழும்பி, பூனெ நடெ நடந்து கதவெ சத்தம் வராத அளவுக்குத் தொறந்து ஹால்லப்
பாத்தா... கருமெம் கருமெம் என்னத்தெ சொல்ல?
ரண்டு பயெ ஒடம்புலயும் ஒட்டுத்துணி யில்ல.
ஒருத்தனெ ஒருத்தம் கட்டிக்கிடறாம். ஒருத்தனுக்கு ஒருத்தம் முத்தத்தெ கொடுத்துக்கிறாம்.
ச்சைய். பொம்பளையோட படுத்தா அவ்வேம் சாமியாரு பயலா ஆயிடுவாம் போல. ஆம்பளையோட படுத்தாத்தாம்
அவனுக்கு சாமியாரு தன்மெ மாறும் போலருக்கு. அதெ பாக்க பாக்க ஒடம்பெல்லாம் நடுங்குது.
மனசுக்குள்ள கேவல் கேவலா வருது. ஒண்ணுத்தையும் சத்தத்தெ காட்டிக்கிடல. எப்படி சத்தம்
காட்டாம கதவெத் தொறந்துட்டுப் பாத்துன்னோ அப்படியே சத்தங் காட்டாம கதவெ சாத்திட்டு
ரூமுக்குள்ள வந்தேம்.
ஒண்ணுஞ் சொல்ல முடியாம ரூமுக்குள்ளப்
போயி உக்காந்து அழுதேம்ண்ணே! வாழ்க்கையெ வெறுத்தாப்புல ஆயிடுச்சு. இதெ யாருகிட்டெ
சொல்றது? எப்பிடிச் சொல்றதுன்னுப் புரியாம வேற கொழம்பிப் போனேம். யப்பாயும் நீயும்
பெருஞ்செலவெப் பண்ணில்லா கலியாணத்தெ முடிச்சி வுட்டீயே. யிப்பிடி ஒரு பொட்டப் பயலெ
கட்டி வெச்சுப்புட்டதா தெரிஞ்சா நீஞ்ஞ வேற மனசு ஒடைஞ்சிப் போயிடுவீயோன்னு நாம்ம மனசு
ஒடைஞ்சிப் போயிட்டேம். ஒவ்வொண்ணையும் நெனைக்க நெனைக்க ஒவ்வொரு நாளும் நரக வேதனையா
இருந்துச்சு. எப்பிடியாச்சும் அவ்வனெ மாத்திக் கொண்டாந்துப்புடணும்ன்னு நம்ம வேண்டாத
சாமிக யில்ல. எப்பிடியாச்சும் மாத்திப்புடணும்ன்னு உறுதியா நம்புறதெ தவுர நமக்கு வேற
வழியும் தெரியல. அதுக்கு ன்னா பண்றதுன்னு யோஜிப்பத்தாம் எப்படியாச்சும் அவனுக்குப்
புடிச்சாப்புல நடந்து அதெ மாத்தணும்ன்னு முடிவு பண்ணுனேம். அதுவும் போயித் தப்பாத்தாம்
முடிஞ்சிதுண்ணே!"ன்னு சொல்லிட்டு ஓன்னு சத்தம் போட்டு அழ ஆரம்பிச்சிட்டா செய்யு.
மேக்கொண்டு இதெப் பத்தி எப்பிடி கேக்குறதுன்னு
விகடுவுக்கும் சங்கடமா ஆயிட்டு. இவ்வளவு நடந்தா ஒரு பொண்ணு ஏம் பைத்தியம் பிடிச்சாப்புல
ஆவ மாட்டான்ன விகடு நெனைச்சாம். அவ்வேம் அப்படி நெனைச்சிக்கிட்டு இருக்குறப்பவே செய்யு
கண்ணெ தொடைச்சிக்கிட்டு மேக்கொண்டு பேச ஆரம்பிச்சா.
“அவனுக்குப் பிடிச்ச மாரில்லாம் நடந்தா
அவ்வேம் மாறிடுவாம்ன்னு நெனைச்சேம். அவ்வேம் சொல்றபடியெல்லாம் அதுக்குப் பெறவு ஆட
ஆரம்பிச்சேம். நாம்ம அவனையும் தோலாமணியையும் ஹால்ல வெச்சுப் பாத்ததெ அவ்வேங்கிட்டெ
சொல்லல. அதெ வெளியில் சொல்லி அத்து ஒரு பெரச்சனையாயி, நாம்ம சாமர்த்தியமா குடும்பம்
பண்ணலங்றதாலத்தாம் அவ்வேம் அந்த மாதிரி நடந்துக்குறேம்ன்னு ஒரு பேர்ர கட்டிப்புடுவாம்ன்னு
நெனைச்சுக்கிட்டு, நாம்ம கொஞ்சம் பொறுமெயா முயற்சி பண்ணுனா மாத்திப்புடலாம்ன்னு நம்மளே
நாமளே தெகிரியம் பண்ணிக்கிட்டேம்.
“என்னவோ ஏதோ எங்கிட்டெ ஒஞ்ஞளுக்குப்
பிடிக்கல. அத்து என்னான்னு கேட்டேம். அப்பிடில்லாம் இல்லன்னு அவ்வேம் சாதிச்சாம். நம்மளப்
பிடிச்சித்தாம் கலியாணத்தெப் பண்ணிட்டீயளான்னு கேட்டேம். பிடிச்சித்தாம் பண்ணதாம்னு
சொன்னாம். யிப்பிடி எதெ கேட்டாலும் அதுக்குப் பிடி கொடுக்காமலே பேசிட்டு இருந்தாம்.
அவனெ எப்பிடி வழிக்குக் கொண்டு வர்றதுன்னுப் புரியாம வெக்கத்தை வுட்டுக் கேட்டேம்.
ஏம் எங் கூட படுக்க மாட்டேங்குதீயே? நீஞ்ஞ எதிர்பாக்குற மாதிரிக்கிப் பட்டணத்துப் பொண்ணு
போல நாம்ம ல்லியான்னும் வெளிப்படையா கேட்டேம். அப்பிடில்லாம் இல்லன்னு அடிச்சிச் சொன்னாம்.
பட்டணத்துப் பொண்ணுவோல்லாம் எவளும் பத்தினி யில்லன்னுத்தாம் கிராமத்துப் பொண்ணான
நம்மளக் கட்டுனதா சொன்னாம்.
“பெறவு ஏம் நம்மகிட்டெ வெலகிப் போவணும்?
எதா இருந்தாலும் சொன்னா நாம்ம அதுபடிக்கு நடந்துக்கிடுறேம்?ன்னேம். அவ்வேம் சொல்றதுக்கு
ரொம்பவே தயங்குனாம். நாம்ம அவ்வேம் கால்ல வுழுந்து, நாம்ம ஒஞ்ஞப் பொண்டாட்டி, நம்மளத்
தாண்டி எந்த ரகசியமும் வெளியில போவதுன்னு சாமி மாடத்துலேந்து கற்பூரத்தக் கொழுத்திச்
சத்தியம் பண்ணேம். அப்பத்தாம் அவனுக்குக் கொஞ்சம் நம்பிக்கெ வந்துச்சு.
“அவ்வேம் சொன்னாம், ஒங் கூட படுக்கணும்ன்னா
நாம்ம நம்ம இஷ்டப்படியெல்லாம் நடந்துப்பேம். அதுக்குல்லாம் நீயி ஒத்துக்கிடணும்ன்னாம்.
அதுக்கு நாம்ம நீஞ்ஞ எதெ சொல்லி அதுக்கு நாம்ம ஒத்துக்கிடலன்னு கேட்டேம். நம்மளப்
பத்தி எந்த வெதத்துலும் தப்பா நெனைச்சிப்புடக் கூடாதுன்னு ஆரம்பிச்சவேம் அவனெப் பத்திச்
சொல்ல ஆரம்பிச்சாம்.
“அவ்வேம் சொன்னாம்ண்ணே! இந்தக் கருமத்தெயெல்லாம்
நம்மட வாயால சொல்லணும்ன்னு இருக்கு. நீயி அதெ கேக்கணும்ன்னு இருக்கு பாரு. எல்லாம்
தலயெழுத்து. இதெயெல்லாம் சொல்லாட்டியும் ஒஞ்ஞளுக்கும் நெலமெ புரியாது. ஏம் இப்பிடில்லாம்
நடக்குதுங்ற காரணமும் புரியாது. அதுக்காகத்தாம் சொல்லித் தொலய வேண்டிதா இருக்கு. அதாச்சி
அவ்வேம் சொன்னாம் பாரு, அவ்வேம் டாக்கடர்ரா இருக்குறதால ஒரு நாளைக்கு நெறைய கேஸ்களப்
பாக்குறுதால டென்சன் ஆயிடுறதாவும், அந்த டென்ஷனெ எப்பிடிப் போக்கிக்கிறதுன்னும் தெரியலன்னாம்.
அந்த டென்ஷன்லாம் கொஞ்சம் மனம் போன போக்குல நடந்துக்கிட்டாதாம் சரியாவும்ண்ணாம்.
விசயத்தெ பிடிக்கணும்ன்னு அவ்வேம் போக்குல போனாத்தாம் ஆவும்ன்னு, செரித்தாம் ஒஞ்ஞ இஷ்டத்துக்கு
எப்பிடி வேணும்ன்னாலும் நடந்துக்கோங்க. வேணும்ன்னா சீரெட்டுப் பிடிக்கிறதுன்னாலும்
ஒரு நாளைக்கு ஒண்ணு ரண்டுன்னு பிடிச்சிக்கோங்க, குடிக்கிறதுன்னு தோணுன்னாலும் கொஞ்சமா
குடிச்சிக்கோங்கன்னு எறங்கி வர்ற அளவுக்கு நாம்ம பேசுனேம். அவனுக்குக் கோவம் வந்துப்புடுச்சுண்ணே.
நம்மளப் பத்தி என்னத்தெ நெனைச்சிக்கிட்டென்னு ஒடனே சண்டைக்கி வந்துப்புட்டாம். அய்யே
இவனெப் பத்தித் தப்பா நெனைச்சிப்புட்டேமேன்னு நமக்கும் வருத்தமாப் போச்சு. புருஷங்காரனெ
தப்பா நெனைச்சது நம்ம தப்புதான்னு நெனைச்சிக்கிட்டு மன்னிச்சுக்கோங்கன்னு கேக்கறதுக்கு
நாம்ம தயங்கல.
அப்பத்தாம்ண்ணே அவ்வேம் கொஞ்சம் அமைதியாயி
சொன்னாம், இன்னிக்கு ராத்திரிக்கி நாம்ம ரூமுக்குள்ள என்ன செஞ்சாலும் அதெ ஏத்துக்கணும்.
அதெப் பத்தி வெளியில எதுவும் சொல்லக் கூடாது. நாம்ம ன்னா வேணாலும் பண்ணுவேம்ன்னு சொல்லி
மறுக்கா அவ்வேம் ஒரு தடவெ சாமி மாடத்துலப் போயி சூடத்த கொளுத்தி அதுல சத்தியத்தெப்
பண்ணச் சொன்னாம். எப்பிடியோ புருஷங்கார்ரேம் மனசு மாறி நம்மளச் சுத்தி வந்தாப் போதும்ன்னு
நெனைச்சிக்கிட்டு நாமளும் இன்னும் எத்தனெ கற்பூரத்த வாணாலும் கொளுத்துங்க, நாம்ம சத்தியம்
பண்ணுறேம்ன்னு சத்தியம் பண்ணுனேம். அதுலயும் நம்பிக்கெ வாரல போல அவனுக்கு. எந் தலையில
அடிச்சிச் சத்தியத்தெ பண்ணச் சொன்னாம். புருஷங்காரனெ வுட நமக்கு ன்னா பெரிசா வந்துப்புடுச்சுன்னு
நாமளும் நம்ம தலையில அடிச்சியும் சத்தியம் பண்ணுனேம்.
அன்னிக்குத்தாம் யண்ணே அவ்வேம் கிளினிக்குப்
போகலன்னு வூட்டுலயே உக்காந்தாம். அத்தோட தோலாமணியையும் யாராச்சும் பிரண்டோட ரூமுக்குப்
போயிடுடான்னு அடிச்சி வுட்டாம். மார்க்கெட்டுக்குப் போயி என்னென்னவோ வாங்கியாந்தாம்.
மொத ராத்திரிக்கு என்னென்ன பண்ணுவாளோ அத்தனையும் பண்ணுனாம். நமக்கே யப்போ குத்த
உணர்ச்சியாப் போயிடுச்சு. நாம்மத்தாம் இம்மாங் காலமா புருஷங்காரனோட மனசெ புரிஞ்சிக்கிடாம
இருந்துட்டேம்ன்னு நெனைச்சி ரொம்ப மனத்தாங்கல் பட்டுக்கிட்டேம். செரித்தாம் நம்மளப்
புடிச்சி சனியன்லாம் இன்னியோட வுட்டுச்சுன்னு நெனைச்சி சந்தோஷப்பட்டுக்கிட்டேம்.
அன்னிக்கு ராத்திரிக்கு அவனெ குளிச்சி
முடிச்சிட்டு சமைச்சாம்ன்னாம். நமக்கு ஆச்சரியம் தாங்க முடியல. நம்மள ஒரு வேளையும்
செய்யக் கூடாதுன்னு சொல்லிட்டாம். அவனே பொம்பளையப் போல பரிமாறுனாம். சாப்பாட்டு
முடிஞ்சி அவனே பால்லக் காய்ச்சி அதெ எடுத்துக்கிட்டு ரூமுக்குள்ள வந்தாம். நம்மள எழுந்திரிக்கச்
சொல்லி பால் தம்பளர்ர நம்ம கையில கொடுத்து நம்ம கால்ல வுழுந்தாம் பாரு. நமக்கு அப்பிடியே
ஈரக்கொலையே நடுங்கிப் போயிடுச்சு. ன்னா இப்பிடிப் பண்ணிப்புட்டான்னு நாமளும் அவ்வேம்
கால்ல பொத்துன்னு வுழுந்துட்டேம். நம்மள வுட வயசுல மூத்தவங்க நம்ம கால்ல வுழுந்தா
பாவம் யாருக்கு வந்துச் சேரும்? நமக்குதானேன்னு அத்து வேற பயமா போயிடுச்சுண்ணே நமக்கு.
லேசா அழுகையும் வந்துடுச்சு. நாம்ம அழுவுறதெப் பாத்துட்டு இதுக்குத்தாம் ஒமக்குப் பிடிக்காதுன்னு
நெனைச்சிக்கிட்டு நெறையதெ நாம்ம சொல்லவே யில்லன்னாம். இந்த படுபாவிப் பயெ மனசு மாறி
திரும்ப பழைய நெலைக்குப் போயிட்டா பெரச்சனையா போயிடும்ன்னு, யில்ல நீஞ்ஞ பண்ணது நமக்கு
ஒரு மாதிரியா இருந்துச்சுன்னு சொன்னேம்.
ஒமக்கு விருப்பம் யில்லன்னா நீயி மேல படுத்துக்கோ,
நாம்ம தரையில படுத்துக்கிடுறேம்ன்னு திரும்ப பழையக் குருடி கதவெ தொறடின்னு ஆரம்பிச்சாம்
பாரு, ஒடனே நாம்ம ன்னா பண்ணாலும் பரவாயில்லன்னு சொல்லிட்டு, மொத மொறையா இத்து நடக்குறதால
கொஞ்சம் அதிர்ச்சியாப் போயிடுச்சுன்னு சொல்லி அவனெ சமாதானம் பண்ணுனேம். இனுமே நாம்ம
எத்துப் பண்ணாலும் நீயி அதிர்ச்சியடைய மாட்டேன்னு சத்தியம் பண்ணாத்தாம் நாம்ம மேக்கொண்டு
இஞ்ஞ யிருப்பேம்ன்னாம். அந்தத் தோலாமணி பயகிட்டெப் போயி படுக்குறதுக்கு ன்னா கருமத்தெ
வாணாலும் பண்ணிட்டு இஞ்ஞயே படுத்துக்கிடட்டும்ன்னு நெனைச்சி நாமளும் சரின்னு தலையில
அடிச்சி சத்தியம் சொன்னேம்.
அவ்வேம் உடுப்புகள ஒவ்வொண்ணா அவுக்க ஆரம்பிச்சாம்
ண்ணே! யய்யோ யய்யோ அந்தக் கொடுமெயே ஏங் கேக்குறே? பொம்பளைகப் போடுற பிராவே மாருல
போட்டுக்கிட்டு, பொம்பளைகப் போடுற பூப்போட்ட பேண்டிஸப் போட்டுக்கிட்டு நிக்குறாம்.
நமக்கு அப்பிடியே ஒமட்டிக்கிட்டு வர்றாப்புல ஆயிடுச்சு. ன்னா கருமம்டா இத்துன்னு நெனைக்கிறப்பவே,
ஒம் பாவாடைய ஒண்ணுத்தெ பீரோல்லந்து எடுத்துக் கொடுங்றாம். ஏம்ங்க யிப்பிடிப் பண்ணுதீயேன்னு
நாம்ம மலங்க மலங்க அழுவ, இதுக்குத்தாங் ஒமக்குப் பிடிக்காதுன்னு இதெ நாம்மச் சொல்லல.
நம்மள நம்மப் போக்குக்கே வுட்டுப்புடுன்னு சொல்லி வெலகிப் போறாம்.
பாக்கக் கூடாத கருமெத்தப் பாத்தப் பெறவு
இனுமே என்ன கருமத்தெப் பாக்கணுமோன்னு நெனைச்சிக்கிட்டு அந்தப் பயலுக்காக ஒரு பாவாடைய
எடுத்துத் தூக்கிப் போட்டேம். அதெ கட்டிக்கிட்டு ஒரு ஜாக்கெட்ட எடுத்துக் கொடு, பொடவைய
எடுத்துக் கொடுன்னு நச்சரிச்சு அதெ போட்டுக்கிட்டு ஒரு பொம்பளைய்ப போல பொடவைக்
கட்டிட்டு நிக்குறாம்ண்ணே அவ்வேம். எந் தலையெழுத்து இப்பிடியா ஆவணும்ன்னு நெனைச்சிக்கிட்டு
நாம்ம நெஞ்சுலயே அடிச்சிக்கிட்டேம். ஒடனே அடிக்கிற கைய வந்து தடுத்துட்டுச் சொல்றாம்,
நமக்கு டென்ஷன் தாங்கல. யிப்பிடில்லாம் பண்ணத்தாம் ரிலாக்ஸ் ஆவுதுன்னு. இதுக்கு நீயி
ஒத்துக்கிட்டீன்னா ஒங் கூடவே கட்டில்ல ஒண்ணா படுத்துக்கிடுறேம்ன்னா. நமக்கு அவ்வேம்
தோலாமணியோட படுத்துக் கெடந்தது நெனைப்புக்கு வர்ற எந்தக் கருமாந்திரத்தையோ பண்ணித்
தொலைன்னு வுட்டுப்புட்டேம்.
அன்னிக்கு ஆரம்பிச்ச வெனைத்தாம்ண்ணே! தெனம்
தெனம் இந்தக் கூத்துதாம். வெத வெதமா பேண்டிஸையும், பிராவையும் தெனம் தெனம் வாங்கியாறது.
நம்மளோட ஒரு பாவாடை, பொடவெ வுடாம போட்டுக்கிதது. மத்தியானம் சாப்புட வந்தாம்ன்னா
கதவெல்லாம் சாத்திப்புட்டு, பேண்டிஸ் பிரா போட்டுக்கிட்டு உக்காந்துத்தாங் சாப்புடுவாம்.
இன்னிக்கு ஒம் இஷ்டம் போல இருடான்னு சொன்னா போதும், கிளினிக்குக் கூட போவாம ஒரு
பாவாடெ, பொடவெ வுடாம கட்டிப் பாத்து நம்மகிட்டெ எப்பிடி இருக்கேம்ன்னு கேட்டு கொன்னே
புடுவாம். ஒரு பொம்பளையான நமக்கே பொம்பள வுடுத்துறது எத்தனென்னு தெரியலண்ணே. அவனுக்கு
அவ்ளோ தெரிஞ்சிருந்துச்சு. கொஞ்சம் கொஞ்சமா பொடவெயிலேந்து சுரிதாரு, பாவாடெ தாவணி,
மாடர்ன் டிரஸ்ஸூன்னு ஒண்ணு வுடாம வாங்கியாந்து போட்டுப் பாக்க ஆரம்பிச்சாம்.
அவ்வேம் செஞ்சதுக்கெல்லாம் ஒண்ணுஞ் சொல்லாம்
ஏத்துக்கிட்டதல அவனுக்கு ஏக குஷி. அந்த குஷி தாங்க முடியாம நாம்ம ஹனிமூன் போவணும்ன்னாம்.
இப்பிடியே இவ்வேம் போக்குலயே போயி, அப்பிடிப் போனாலாச்சும் கொஞ்சம் மனசு மாறுதான்னு
நெனைச்சி நாம்ம அதுக்குச் சம்மதிச்சேம். கோயம்புத்தூருக்கு அவ்வேம் ஏரோப்ளான்ல டிக்கெட்
புக் பண்ணி அழைச்சிட்டுப் போறதா சொன்னாம்.
*****
No comments:
Post a Comment