7 Oct 2020

அது அங்கே இருக்கிறது

அது அங்கே இருக்கிறது

து அங்கே இருக்கிறது

தோண்டிப் பார்ப்பவர்களுக்குப் பீறிடுகிறது

தேடிப் பார்ப்பவர்களுக்கு அகப்படுகிறது

முயன்று பார்ப்பவர்களுக்கு கை கூடுகிறது

எதுவும் செய்யாதவர்களுக்காக

அது விலகி ஓடுவதில்லை

எதுவும் செய்யாதவர்களை

அது விலக்கி வைப்பதும் இல்லை

அது அங்கே இருக்கிறது

விருப்பமில்லாதவர்கள் பார்க்காமல் இருக்கலாம்

விரும்பியவர்கள் பார்த்துக் கொள்ளலாம்

அதுவாக வந்து முகம் காட்டாது அது

அது அங்கே இருக்கிறது முகவரியற்று

அதை அங்கே பார்ப்பவர்களுக்கு

அது முகவரி கொடுக்கிறது

*****

No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...