3 Dec 2019

18.4



            மூன்றாவது கூட்டத்தில் சோதிடர் சாமி, 'மாசி யாருக்கு ராசி?' என்ற தலைப்பில் ஒரு சிற்றுரை வழங்குகிறார்.

            "மேஷம், ரிஷபம், மிதுனம், கன்னி, தனுசு ராசிக்காரர்கள் வெற்றி திசையில் இருக்கிறார்கள்.
            விருச்சிக ராசிக்காரர்கள் வாகனத்தில் செல்கையில் கவனமாகச் செல்லவும். கடக, கும்ப ராசிக்காரர்கள் கவனமாக இருக்கவும்.
            மீன ராசிக்காரர்கள் இம்மாதத்தில் முடிவுகளை ஒத்திப் போடவும்.
            துலாம், மகர ராசிக்காரர்கள் குடும்ப விசயங்களில் கவனமாக இருக்கவும்" - இதுதான் சோதிடர் சாமி பேசியதன் சுருக்கம். இலக்கியக் கூட்டத்தில் சோதிடத்திற்கு இடம் இருக்கக் கூடாதா என்னவோ? எல்லாவற்றுக்கும் இடம் கொடுப்பதுதானே இலக்கியம். இதனால் சோதிட இலக்கியம் என்ற புதிய இலக்கிய வகைமை கூட உருவாகலாம்.
            சோதிடர் சாமி பேசி அமர்ந்ததும் கித்தாஸ் பண்டாரம் எழுந்து விட்டார். சாமி தமிழில் பேசியதற்கு, என்னவென்றே புரியாத ஆங்கிலத்தில் கித்தாஸ் பொங்கி எழுந்து விட்டார். அவர் பேசியதன் விவரம் வார்த்தைக்கு வார்த்தை வருமாறு,
            "You can create your own taste. In lot of tasks our expectations go wrong. It doesn't reach the goal correctly. So limit your attempts and expectations with your level. Don't go beyond your level."
            இதை பேசுகிற போது கித்தாஸ் நிரம்ப உணர்ச்சிவசப்பட்டு இருக்கிறார். கீச்சுக்குரலில் பேசுகிறார். ஆங்கிலம் என்றால் அது அவரின் உணர்ச்சிவசப்படுதலில் அடையாம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாவலாசிரியருக்கு ஆங்கிலம் சரியாக வராது என்பதால் வாசகர்களே அதன் பொருளைப் புரிந்து கொள்ள கடமைப்பட்டவர்கள் ஆவார்கள். மேலும் சோதிடர் சாமி பேசியதற்கும், கித்தாஸ் அளித்த பதிலுக்கும் சம்பந்தம் ஏதேனும் இருக்கிறதா என்பதற்கும் வாசகர்களே பதில் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் நாவலாசிரியருக்கு இருக்கிறது. எது எப்படியோ? இரண்டு ஆங்கில வாசகங்கள் நாவலில் வந்ததில் நாவல் உலகத்தரத்துக்கு எம்பி எகிறி இருக்கும் என்று நாவலாசியரியர் கற்பனையில் மிதப்பது சரியோ? தவறோ? வாசகர்களே மதிப்பிட வேண்டும்.
            இதில் மீண்டும் மீண்டும் படிப்பதன் மூலமே இதற்கான மதிப்பீட்டைப் பிடிப்பது நல்லது. மதிப்பீட்டைப் பிடிக்கிறேன் என்று ஒரு முறை மட்டும் படித்து அழுத்தம் கொடுப்பது சரியானதல்ல. அழுத்தம் கித்தாஸ் அவர்களின் கோட்பாட்டுக்கு எதிரானது.
*****


No comments:

Post a Comment

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை!

பழக்கங்களும் தாவரங்களும் – வள்ளுவரின் பார்வை! மனிதர்களும் விலங்குகளும் குறிப்பிட்ட காலம் வரை வளர்கின்றனர். தாவரங்கள் அப்படியல்ல. ஆயுள் ம...