டேட் பிக்ஸ்
பண்ணி அரசியலுக்கு வர்ற அளவுக்கு, அரசியல் ஒரு பார்ட் டைம் ஜாப்பாகவா போகணும்?
நேரம் இருந்தால்
அரசியல் செய்கிறார்கள். இல்லையென்றால் சொந்த வேலையைப் பார்க்கப் போய் விடுகிறார்கள்.
இதிலென்ன தவறு இருக்க முடியும் என்று நீங்கள் கேட்கலாம். தவறில்லைதான். மக்களும் நேரம்
இருந்தால்தான் கவனிப்பார்கள். இல்லையென்றால் தங்கள் பிரச்சனைகளைக் கவனிப்பவர்கள் யாரோ
அவரைக் கவனிக்கப் போய் விடுவார்கள்.
மக்கள் அன்பை,
அரவணைப்பை, தங்களுக்கான குரலை எதிர்பார்க்கிறார்கள்.
அவர்களுக்கான
அன்பில்தான் ஊழல் செய்கிறார்கள்.
அவர்களுக்கான
அரவணைப்பைத் தருவதற்குதான் கையூட்டு கேட்கிறார்கள்.
அவர்களுக்கான
குரலை ஒலிக்கும் இடத்தில்தான் தங்களுக்கான சுயநலத்தை, சுயபாதுகாப்பை மட்டும் பேசுகிறார்கள்.
அப்படியானால்
அரசியலுக்கு வரக் கூடாதா என்று கேட்டால்... வரலாம்! அதில் புரிந்து கொள்ள வேண்டிய
ஒரு விசயம் இருக்கிறது. அது என்னவென்றால்...
சில பேர்
எதிர்பார்க்கிற மாதிரி அரசியலில் சேப்டி ஸோன் என்பதெல்லாம் இல்லை. எல்லா இடங்களும்
ரிஸ்க்தான். அந்த ரிஸ்கை எதிர்கொள்வதால்தான் மக்கள் அவர்களைத் தலைவர்களாக ஏற்றுக்
கொள்கிறார்கள்.
*****
No comments:
Post a Comment