24 Dec 2018

ஒரு லோடு என்ன விலை?


மனைவியைக் கோபப்படுத்தக் கூடாது
பிறந்து வீட்டுக்குப் போய் விடுவார்கள்
கணவரைக் கோபப்படுத்தக் கூடாது
டாஸ்மாக்குக்குப் போய் விடுவார்கள்
‍மொத்தத்தில் யாரும் யாரையும் கோபப்படுத்தக் கூடாது
அதுதான் நல்ல பழக்கமாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.

ஒரு லோடு என்ன விலை? என்றார் ஏகாம்பரம்.
நான் ஒரு லாரி மணல் லோடைத்தான் கேட்கிறார்கள் என்று நினைத்து இருந்தேன்.
பிறகுதான் தெரிந்தது, அரசியல் கூட்டத்துக்கு ஒரு லாரி லோடு மக்களை அழைத்துச் செல்வதற்கான தொகை அதுவென்று.
உலகத்தில் நிறைய விசயங்கள் நமக்குத் தெரியாமலே இருக்கிறது பாருங்கள்.

புது வருடம் பிறக்கப் போகிறது. சுவர் நிறைய ஆணிகளை அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். அப்புறம் என்ன சார்? அவ்வளவு காலண்டர்கள் கொடுக்கிறார்கள். நிறைய டைரிகளும் கொடுக்கிறார்கள். அதை பிள்ளைகள் இம்போஷிஷன் எழுத வைத்துக் கொள்வார்கள்.

இந்தியாவில் மருத்துவச் செலவு கம்மி என்கிறார்கள். அப்புறம் எப்படி ஒரு இட்லி ஒரு கோடிக்கு விலை போனது என்றால் மருத்துவச் செலவுதான் கம்மி, இட்லி விலை அதிகம் என்கிறார்கள். இட்லி அவ்வளவு காஸ்ட்லி புட்டா என்றால் சட்டினியாக்கி விடுவோம் என்கிறார்கள்.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...