சிறிய காயம் பெரிய மாயம்
இரவு
வானில் நட்சத்திரங்களை மிதிக்காமல்
நடந்து
பார்க்கலாமா என்று
முயன்று
பார்த்த நாளில்தான்
நிலா
தடுக்கி விழுந்தேன்
நட்சத்திரங்கள்
பெரிது
நிலா
சிறிது
நீ
எப்படி நிலா தடுக்கி விழுந்தாய் என்று
கேட்பவர்களுக்கு
என்ன சொல்வேன்
அன்பு
பெரிது
என்
காதல் சிறிது என்றா
சிறியது
தடுக்கி விழ வைக்கும் போது
பெரியது
காயத்தை மறைத்து விடும் அதிசயத்தை
சூட்சம
வார்த்தைகளால் எப்படிச் சொல்வேன்
*****
No comments:
Post a Comment