ஷங்கர் - கொலைகளின் காதலன்
இயக்குநர்
ஷங்கரின் படங்களைப் பார்க்கும் போது அவர் கொலைகளின் காதலனோ எனக்குத் தோன்றும்.
அவர் படங்களின்
மைய இழையாக வித்தியாசமான கொலைகள் எனும் சரடு உள்ளது.
அவரது முதல்
படமான ஜென்டில்மேனிலிருந்து இதைத் தொடங்குகிறார். உடல் உறுப்புகள் வெடித்து வெளியே
சிதறித் துடிக்கும் காட்சியை அப்படத்தில் பார்க்க முடியும்.
காதலன்
படத்தின் கொலைகள் வெடிகுண்டோடு தொடர்புடையவைகள்.
இந்தியன்
படத்தின் மைய இழை இந்தியன் தாத்தா செய்யும் கொலைகள். அந்தக் கொலைகளுக்கு வர்மம் எனும்
சரடைப் பயன்படுத்தியிருப்பார் ஷங்கர்.
அந்நியன்
படத்தின் கொலைகளுக்கு கருடப்புராணத்தைப் பயன்படுத்தியிருப்பார்.
ஐ படத்தின்
கொலைகளும் கருடப்புராணத்தின் தொடர்ச்சி என்பது போல தோன்றும்.
சிவாஜி
படத்தில் கொலையை கிளைமாக்ஸில் அமைத்திருப்பார்.
எந்திரன்
படத்தில் ரோபோ செய்யும் கொடூர கொலையைக் காட்டியிருப்பார். மனிதர்களைத் தாண்டி ரோபோவையும்
கொலை செய்ய பயன்படுத்தியிருப்பார் அந்தப் படத்தில் ஷங்கர்.
2.0 படத்தில்
அவரது கொலை முயற்சிகள் இன்னும் முன்னேற்றம் அடைந்து ஆத்மா, சயின்ஸ் பிக்ஸன் என்று நீள்கிறது.
கொலைகளை
மையப்படுத்தி அதற்கேற்றாற் போல் ஷங்கர் கதையைப் பூசுகிறாரோ என்ற ஐயம் ஏற்படுவது தவிர்க்க
முடியாததாகிறது.
குரூரமான
கொலைகளை மையப்படுத்திய பிரமாண்ட படங்கள் என்று ஷங்கரின் படங்களை வகைபடுத்தலாம்.
இயக்குநர்
பாலாவின் படங்கள் விளிம்பு நிலை மக்களின் கொலைகளை மையப்படுத்தியது போன்ற தோற்றத்தைத்
தருவதைப் போல இயங்குநர் ஷங்கரின் படங்கள் கிராபிக்ஸ், டெக்னாலஜி மற்றும் பிரமாண்டத்தை
மையப்படுத்திய கொலைகளைச் சித்தரிக்கும் படங்கள் என வகைப்படுத்தலாம். தமிழ்த் திரையுலகில்
இவர்களின் அளவுக்கு கொலைகளைக் கையாண்டவர்கள் யாரும் இல்லை என்றே நினைக்கிறேன்.
*****
No comments:
Post a Comment