8 Dec 2018

நவீன மயான காண்டம்


நவீன மயான காண்டம்
அரிச்சந்திர நாடக மயான காண்டம்
நடந்து கொண்டிருக்கிறது
உண்மையைச் சொன்னவன்
பொய் சொன்ன பிண்டங்களைப்
பொசுக்கிக் கொண்டிருந்தான்
பிற்காலத்தில் மகாத்மாவாகும்
சிறுவன் ஒருவன் விழிகள் விரியப் பார்த்துக் கொண்டிருந்தான்
அழிவில்லாத உண்மையைச் சொன்னவன்
மீண்டும் மீட்சி பெறுகிறான் என்ற
முடிவைக் கேட்ட கணத்தில்
சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான்
மகாத்மா ஆன பின்னும் அதுதானே நிகழப் போகிறது
என்று மறுபடியும் உண்மையைப் பேசினான் அரிச்சந்திரன்
மற்றுமொரு குண்டு வெடித்தது
மயானத்தில் எரிந்து கொண்டிருந்தான் அரிச்சந்திரன்
*****

No comments:

Post a Comment

ஆசைகளை அரித்த கறையான்

ஆசைகளை அரித்த கறையான் சிறுக சிறுக சேர்த்த பணம் ஒவ்வொரு நாளாய்ச் சேர்த்த பணம் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி மிச்சப்படுத்திச் சேர்த்த ப...