தீப்பொறி திருமுகம் சொன்னவைகள் -
2
நீதான்
ஞானமடைந்து விட்டாயே! அதை ஏன் எங்களுக்குக் காட்டிக் கொண்டிருக்கிறாய்!
ஞானமடைந்தவர்
என்று எவருமில்லை. நாம்தான் அப்படி நினைத்துக் கொண்டிருக்கிறோம். அப்படி நினைக்க
வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
திருட்டு
என்பது மனிதரின் ஆதித்தொழில் என்பார்கள். கதைத் திருட்டு என்பது மனிதரின் நவீனத் தொழில்
என்பேன்.
ஆசைகள்
இருக்கும் வரை குற்றங்கள் இருக்கும். குற்றங்கள் இருக்கும் வரை கதைகள் இருக்கும்.
அரசியல்,
சினிமா இரண்டும் ஒன்று. இரண்டுக்கும் இருட்டு, வெளிச்சம் இரண்டும் தேவை. சினிமாவில்
திரை வெளிச்சத்தில், பார்வையாளர்கள் இருட்டில் இருப்பார்கள். அரசியலில் தலைவர்கள் வெளிச்சத்தில்,
மக்கள் இருளில் இருப்பார்கள்.
*****
No comments:
Post a Comment