5 Dec 2018

ஒரு நல்ல வழிமுறை


ஒரு நல்ல வழிமுறை
நீங்கள் மாற நினைத்தால்... இப்போது இருக்கும் நிலையிலிருந்து எதிராக சிந்தியுங்கள்.
அதாவது,
ஏழையாக இருந்தால் அதற்கு எதிராக செல்வந்தரைப் போல சிந்தியுங்கள்.
கோழையாக இருந்தால் அதற்கு எதிராக வீரரைப் போல சிந்தியுங்கள்.
அச்சத்தில் இருந்தால் அதற்கு எதிராக தைரியத்தைப் பற்றிச் சிந்தியுங்கள்.
முடியாது என்று நினைத்தால் அதற்கு எதிராக எப்படி முடிப்பது என்று சிந்தியுங்கள்.
கவலையில் இருந்தால் அதற்கு எதிராக நகைச்சுவையாகச் சிந்தியுங்கள்.
கோபத்தில் இருந்தால் அதற்கு எதிராக அமைதியைப் பற்றிச் சிந்தியுங்கள்.
அவநம்பிக்கையில் இருந்தால் அதற்கு எதிராக நம்பிக்கைக் கொள்வதைப் பற்றிச் சிந்தியுங்கள்.
தோல்வியில் இருந்தால் அதற்கு எதிராக எப்படி வெற்றி பெறுவது என்பதைப் பற்றிச் சிந்தியுங்கள்.
இப்படித்தான் உலகில் மாற்றங்கள் நிகழ்கின்றன. அப்படி ஒரு மாற்றத்தை நிகழ்த்துவதற்கு இது ஒரு நல்ல வழிமுறையாக இருக்கும்.
*****
உங்களுக்குத் தகுந்தாற் போல உலகை மாற்றிக் கொள்வதும், உலகிற்குத் தகுந்தாற் போல் உங்களை மாற்றிக் கொள்வதில் உங்கள் மனதில் இருக்கிறது. உலகில் அப்படி எதுவுமில்லை. உலகம் அது பாட்டுக்கு இயங்கிக் கொண்டிருக்கிறது. அதற்கு இவைகள் எதுவும் தெரியாது.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...