4 Dec 2018

பயத்தைப் போக்க முடியுமா?


யத்தைப் போக்க முடியுமா?
பயத்தைப் போக்க முடியுமா? என்று கேட்கிறார்கள்.
பயம் என்ன போக்கவே முடியாத அழுக்குக் கறையா என்ன?
இயலாமைகளை, முடியாமல் போனவைகளை, எதிர்மறைகளை நினைக்கும் போது பயம் தோன்றுகிறது.
இந்த உலகில் இயலாமைகள் என்று எதுவும் இல்லை. இன்று இயலாமல் போகும் ஒன்று என்றோ ஒரு நாள் இயலும் ஒன்றாகிறது.
இன்று முடியாமல் போனது, என்றோ ஒரு நாள் முடிக்கக் கூடியதாகிறது.
இன்று எதிர்மறையாக இருப்பது என்றோ ஒரு நாள் நேர்மறையாகிறது.
எல்லாம் மாறும் போது பயமும் மாறும்.
பயத்தை நிலையென்று நினைப்பதுதான் இருப்பதில் பெரிய பயம்.
சில விசயங்கள் புரிவதற்குக் காலம் தேவைபடுகிறது என்பதைப் புரிந்து கொண்டால் பயம் விலகி விடுகிறது.
புரிந்து கொள்ள முடியாத ஒரு தோற்றம்தான் பயமாக உருவெடுக்கிறது.
புரிந்து கொண்ட பின் எதுவும் அங்கிருப்பதில்லை. அதன் பின் பயமும் இருப்பதில்லை.
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...