5 Dec 2018

யாருமற்ற உலகின் தர்மம்


யாருமற்ற உலகின் தர்மம்
நீங்கள் பசி பொறுக்க மாட்டீர்கள்
தசையைத்  தின்னுங்கள்
குருதியைக் குடியுங்கள்
விருந்து மேசையில் பரிமாறப்பட்டுள்ள
அனைத்துத் தட்டுகளிலும்
ஏழை எளியவர்களின் ஈரல் இருக்கின்றது
வாழ முடியாதவர்களினுடைய
தின்ன ருசியான இதயம்
தொட்டுக் கொள்ள தயாராக இருக்கின்றது
நீங்கள் தின்று முடித்தப் பிறகு
மிச்சம் இருப்பவர்களுக்காக மீண்டும் தொடருங்கள்
உங்கள் அதிகாரங்களை
சட்டப் பூர்வ நெருக்கடிகளை
யாருமற்ற உலகில் நிலைபெறப் போகும்
உங்கள் தர்மத்தைக் காண
வரலாறு ஆர்வமாய் இருக்கிறது
*****

No comments:

Post a Comment

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்?

நாம் ஏன் தேவையில்லாமல் குறுக்கிட வேண்டும்? மீன்களுக்கு நாம் நீர் நிலைகளை அமைத்துத் தர வேண்டுமா? அல்லது, தட்டான்களும் வண்ணத்துப் பூச்சி...