4 Dec 2018

வனாந்திரம் உருவானது


வனாந்திரம் உருவானது
எனது வனாந்திரங்களில்
மான்கள் துள்ளிக் குதித்தன
முயல்கள் ஓடி ஆடின
சிங்கங்கள் வேட்டையாடின
புலிகள் பதுங்கின
நரிகள் தந்திரம் செய்தன
யானைகள் கிளைகளை முறித்தன
இன்னும் என்னனென்னவோ எல்லாம் நடந்தேறின
அப்போதெல்லாம் எதுவும் ஆகாத
வனாந்திரம் என்று அறியப்படாத
எனது வனாந்திரம்
துப்பாக்கிச் சூடுகளில் விலங்குகள் கொல்லப்பட்டு
லாரிகளில் மரங்கள் வெட்டப்பட்டு ஏற்றப்பட்டு
இப்போதே வனாந்திரம் என்று அறியப்படுகிறது
வானந்திரக் காவலர்கள் வந்த பிறகு
*****

No comments:

Post a Comment

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா?

கடனின்றிக் கல்வி கற்பது சாத்தியந்தானா? கல்விக்கடன் சரியா? “கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்றார் அதிவீரராம பா...