ஒரு நாளின் காத்திருப்பு
ஆம்புலன்ஸோ
அமரர் ஊர்தியோ தயார் படுத்திக் கொள்ளலாம்
உறவுகளுக்கு
செய்தி அனுப்பி விடலாம்
மலர்
மாலைகள், பாடை தயார் செய்து விடலாம்
போஸ்டர்கள்,
பிளக்ஸ்களுக்கு முன்னேற்பாடு பண்ணி விடலாம்
மைக்செட்
காரர்களிடம் சொன்னால் தயார் நிலையில் இருப்பார்கள்
சான்று
கொடுப்பவர் சற்று நேரத்தில் வந்து விடுவார்
அவர்
வருகைக்காகக் காத்திருக்கும் நேரத்தில்
இன்னும்
எத்தனை வேலைகள் இருப்பினும்
முடித்துக்
கொள்ளலாம்
செத்தவன்
எழுந்தா வரப் போகிறான்
ஏன்
இப்படியெல்லாம் செய்கிறீர் என்று கேட்கவா போகிறான்
சான்று
கொடுப்பவர் வரட்டும்
அதுவரை
பொறுத்திருப்போம்
நினைவஞ்சலி
நாள் ஒரு நாள் தள்ளிப் போகலாம்
நாளை
கழித்து மரண அறிவிப்பு வெளியாவதால்
என்னவாகி
விடப் போகிறது காத்திருக்கலாம்
*****
No comments:
Post a Comment