10 Dec 2018

இன்னொரு குற்றம்


இன்னொரு குற்றம்
நாட்டில் ஏன் இவ்வளவு பாலியல் அத்துமீறல்கள் நடக்கின்றன?
பொதுவாக பாலியல் அத்துமீறல்களை அவ்வளவு எளிதாக நிரூபித்து விட முடியாது. அப்படியே ரணகளப்பட்டு நிரூபித்தாலும் பாதிக்கப்பட்ட பெண்களை மிகவும் கேவலமாகப் பேசுவார்கள்.
'வெட்கங்கெட்டத் தனமா இதையெல்லாம் போய் வெளியில சொல்லிட்டா இருப்பா பொம்பள' என்பார்கள் பொதுப்படையாக.
பொதுவில் பகிர முடியாத அளவுக்கு பாலியல் அத்துமீறல்களை மெளனமாக முடக்குவதே அவைகள் காலா காலத்துக்கும் தொடர்ந்து கொண்டிருப்பதற்குக் காரணம்.
எங்கு அத்துமீறல்கள் நடக்கிறதோ அது பேசப்பட வேண்டும். அது குறித்து கேள்விகள் எழுப்பப்பட வேண்டும்.
அதற்கான சுதந்திரமும் துணிவும் பாதிக்கப்பட்டோருக்கு இருக்க வேண்டும். பெண்களுக்கான விசயத்தில் அது போன்ற சுதந்திரமும், துணிவும் வழங்க சக குடும்ப உறுப்பினர்களோ யோசிக்கும் நிலையில்தான் நம் குடும்ப அமைப்புகளும், சமூக அமைப்புகளும் உள்ளன.
தனக்கு நேர்ந்த பாலியல் அத்துமீறல் குறித்து ஒரு பெண் பொதுவெளியில் பேசும் போது அவளைக் கூச்சமடையச் செய்யக் கூடாது. அவளை அவமானம் செய்யும் விதத்தில் அவதூறுகளை அள்ளி வீசக் கூடாது. அவளின் எதிர்காலத்தைக் கேள்விகுறியாக்கும் விதத்தில் அவளை இருட்டறையில் முடக்கக் கூடாது.
ஒருவேளை அப்படி யாரேனும் செய்தால் அதுவும் பாலியல் அத்துமீறலுக்கு இணையான இன்னொரு குற்றமாகவே அமையும்.
*****

No comments:

Post a Comment

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்!

மோசடி பேர்வழிகளும் நலம் விரும்பிகளும்! மோசடி பேர்வழிகளுக்கும் நலம் விரும்பிகளுக்கும் குறிப்பிடத்தக்க ஒற்றுமை ஒன்று இருக்கிறது. மோசடி பேர...