அப்படி ஏனடா செத்தாய்?
நீ தற்கொலை
செய்து கொண்டு இறந்தால் கூட
நன்றுதான்
விபத்தில்
அடிபட்டு இறந்தால்
மிக நன்று
நோயில் கிடந்து
மாண்டால்
மிக மிக நன்று
இயற்கை மரணம்
பேரானந்தம்
இப்படி கொலை
செய்யப்பட்டு
இறந்து போனாயே
படுபாவி
இனி உன்னை
கொலை செய்தோரை
நிரூபிப்பதற்குள்
ஆயுளின் பாதி
காலியாகிவிடும்
கடைசியில்
அவர்களும்
கொலைகாரர்கள்
இல்லை என்றாகி விடுவார்கள்
என்ன பாவம்
செய்தேனடா
நீ கொலை செய்யப்பட்டு
சாவ?
அதற்கு முன்
நீயே ஒரு கத்தியால்
உன்னை குத்திக்
கொண்டு
செத்திருக்கக்
கூடாதா
குடி கெடுக்க
வந்த பாவி!
*****
No comments:
Post a Comment