கடனுக்கு என்றே... கடன்கார தேசம்!
வங்கிக் கடனும் அதற்கான செயல்முறைகளும்
மிகுந்த மனஉளைச்சல் தருபவைகள்.
கடன் வழங்கப்படும் என்பது வங்கியின் நோக்கமாக
அவர்கள் வெளியே கூறிக் கொண்டாலும், கடன் வழங்கக் கூடாது என்பதில் அவர்கள் அவ்வளவு
உறுதியாக நடந்து கொள்கிறார்கள்.
மல்லய்யாவுக்கு கடன் வழங்குவார்கள். ஏழை
ராமைய்யாவுக்கு வழங்குவார்களா?
மல்லய்யா போன்றவர்கள் கடன் வாங்கி விட்டு
வங்கிகளுக்குப் பட்டை நாமம் போடுவார்கள்.
ஏழை ராமைய்யா போன்றவர்கள் வங்கியின் வாயிலில்
நுழைவதற்கு முன்னே வங்கிப் பணியாளர்கள் பட்டை நாமத்தைப் போட்டு விடுவார்கள்.
வங்கியில் சகல காரணங்களையும் சொல்லி கடன்
மறுக்கிறார்கள். பிறகு எப்படி கடன் வாங்குவது? தங்களிடமிருந்து யாரும் கடன் வாங்கக்
கூடாது என்பதுதான் அவர்களின் நோக்கம்.
கந்துவட்டிக்காரர்களிடமும், கடன் கொடுத்து
உயிரை எடுக்கும் ரெளடிகளிடமும் சென்று இந்த நாட்டின் பிரஜைகள் சென்று உயிரை விட வேண்டும்
என்பதற்காக வங்கிகள் உருவாக்கப்பட்டிருக்கிறதோ என்ற ஐயப்பாட்டை எப்படிப் போக்கிக்
கொள்வது?
வங்கிகளில் கடன் வாங்குவதற்கு ஓர் அதிகாரச்
செல்வாக்கு, அரசியல் பின்புலம் இவைகள் எல்லாம் வேண்டியதாக இருக்கிறது.
இந்த நாட்டின் பொருளாதாரத்தைப் பின்னோக்கி
இழுப்பதில் வங்கிகளுக்கே பிரதான இடம் இருக்கிறதோ? அவைகள் பணம் இருப்பவர்களுக்கே பணத்தைக்
கொடுக்கின்றன. பணம் இல்லாதவர்களுக்கு சலிப்பையும், அவமானத்தையும் கொடுக்கின்றன. அதைச்
சகிக்க முடியாமல் பணம் இல்லாதவர்கள் தங்களின் ஆர்வம், முயற்சி ஆகியவைகளை மூட்டைக் கட்டிக்
கொண்டு வெளியேறி விடுகிறார்கள்.
இந்த வங்கிகள் கடன் கொடுத்துக் கொண்டுதான்
இருக்கும், கடன் தேவைப்படுபவர்களுக்கு அல்ல, கடன் வாங்க வேண்டிய அவசியம் இல்லாதவர்களுக்கு.
*****
No comments:
Post a Comment