இணையத்திலிருந்து தொடங்கலாம்!
எழுத நினைப்பவர்கள் ஒரு நாளைக்கு குறைந்த
பட்சம் இரண்டு பக்கங்களாவது எழுத வேண்டும். அதிகபட்சத்திற்குக் கணக்குகள் இல்லை.
இணையத்தில் எழுதுவது நல்லது. பத்திரிகைகளுக்கு
எழுதுவது ஆபத்தானது. பிரசுரம் ஆகுமா, ஆகாதா என்ற நிச்சயமற்ற நிலை இருந்து கொண்டே இருக்கும்.
கால மாற்றத்தில் ஒரு எழுத்தாளனாக பரிணமிக்க
சுதந்திரமாக எழுத வேண்டும். அதற்கு பிரசுரம் பற்றிய பயம் இருக்கக் கூடாது. பத்திரிகையை
நோக்கிய எழுத்து அப்படி ஒரு பயத்தை உண்டு பண்ணிக் கொண்டே இருக்கும்.
இணையத்தில் எழுதத் துவங்குவது எழுத்தின்
முக்கியமான வளர்ச்சி நிலை. இங்கு எதிர்வினைகள் அதிகம். கூர் தீட்டிக் கொள்ள வசதியாக
இருக்கும்.
இணையத்தில் எழுதத் துவங்கும் போது எழுதுபவனே
ஒரு பத்திரிகையாகவும் மாறுகிறான்.
உங்கள் இஷ்டம். உங்கள் பத்திரிகையில் நீங்கள்
எதை வேண்டுமானலும் எழுதலாம். எதை வேண்டுமானாலும் பிரசுரிக்கலாம். எல்லாம் நீங்கள் தீர்மானிப்பதுதான்.
எழுத்தாளனுக்கு அப்படி ஒரு சுதந்திரம் வேண்டும். அப்போதுதான் நல்ல எழுத்து பிறக்கும்.
*****
No comments:
Post a Comment