சார்பு
நீ
ஊற்றும்
நீரை மட்டும்
நம்பியிருப்பதில்லை
வேரைக் கொண்டிருக்கும்
மரம்!
*****
விசம்
பாம்பின் விஷம்
பல்லில்
என்பார்
நாக்கில் விஷம் தோய்ந்த
நடுத்தெருக்கார சின்னவர்.
*****
நல்ல விலை
நெல்லுக்கு
நல்ல விலை
கொடுக்கிறார்களோ இல்லையோ
நிலத்திற்குக்
கொடுக்கிறார்கள்
நல்ல விலை.
*****
No comments:
Post a Comment