20 Mar 2017

காக்க... காக்க...


பிரியமுடன்...
மண்புழுவில்
தூண்டில் முள் ஏற்றி,
துடிக்கத் துடிக்க
மீன் பிடித்து,
கோழிக்குஞ்சு வெளிவரும்
முட்டையில்
ஆம்லெட் போட்டு
குழந்தைக்கு ஊட்டுகிறேன்
பிரியமுடன்.
*****

காக்க... காக்க...
காக்க வைத்தப் பேருந்து
மறுபடியும்
காக்க வைக்கிறது
இடையில் நின்று போய்!
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...