20 Mar 2017

இப்ப பாரேன்!


இப்ப பாரேன்!
            முதல் நாள், முதல் காட்சியில், "இப்ப இந்த ஹீரோயினைக் காப்பாத்த டக்குன்னு எங்கிருந்தோ வருவான் பாரேன்!" என்று கமெண்ட் பறப்பதற்கு முன் பறந்து வந்து குதித்தார் ஹீரோ.
*****
தயார் நிலை
            கூட்டத்தைக் கலைக்கச் சென்ற ஏட்டைய்யா, "எதற்கும் ரெண்டு பெட்ரோல் குண்டு தயாரா இருக்கட்டும்!" என்றார்.
*****
பெருமிதம்
            காளை வளர்த்த தாத்தாவை முதன் முறையாகப் பெருமையாகப் பார்த்தான் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் கலந்து கொண்டு வந்த பேரன்.
*****

No comments:

Post a Comment