21 Mar 2017

பஞ்சாயத்து


பஞ்சாயத்து
பஞ்சாயத்தில்
ஒழுக்கமாய்ப் பேசி
தீர்ப்புச் சொல்லி விட்டுச் செல்பவருக்கு
ரெண்டு தொடுப்புகள் உண்டு
கோயில் காசில்
மாத வரும்படி உண்டு
வெளிநாடு போனவன் வீடாய்ப் பார்த்து
நடுராத்திரியில் நுழைவது உண்டு
டீக்கடையில் ஓசி டீ குடிப்பது உண்டு
அஞ்சுக்கும் பத்துக்கும்
பெட்டிக் கடையில்
வெற்றிலைப் பாக்கு வாங்கி
பட்டை நாமம் போடும் பழக்கம் உண்டு
இன்னும் பல உண்டு
என்று தெரிந்தும்
பஞ்சாயத்துப் பண்ண
அவரின்றி ஊரில் யார் உண்டு?
*****

No comments:

Post a Comment

நீங்கள் ஒரு நாயகராக…

நீங்கள் ஒரு நாயகராக… ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் இருக்கிறது பலவீனத்தில் வீழ்த்தும் போது ஒருவர் வீழ்கிறார் தாக்குதலுக்கு முன்பாக பலவ...