21 Mar 2017

உசிர்


உசிர்
            "விவசாயம் செய்யுற வரைதான்டா உசிரோடு இருப்பேன்!" என்ற அப்பா பயிர்கள் கருகுவதற்கு முன்பே உயிரை விட்டார்.
*****
இருக்கிறார்
            போன வருடமே வயலை விற்று விட்டதால், இந்த வருடம் உயிரோடு இருக்கிறார் முன்னாள் விவசாயி நாகராஜ்.
*****
ஆச்சர்யம்
            ஆச்சர்யமாகப் பார்த்தார்கள் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் காளைக்கு ஆதரவான ஜல்லிக்கட்டுப் போராட்டத்தை.
*****
பங்கேற்பு
            கிராமத்தில் விவசாயம் பார்க்க கெளரவம் பார்த்து அமெரிக்கா சென்ற முருகானந்தம் அமெரிக்காவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவானப் போராட்டத்தில் கலந்து கொண்டான்.
*****

No comments:

Post a Comment