நன்றாகத் தெரிந்த ஒன்று!
காளைகளை வளர்த்தவர்கள்
டிராக்டர்கள் வாங்கி
வைத்து நிலத்தை உழுகிறார்கள்
டாடா ஏசில் மூட்டை ஏற்றி
வருகிறார்கள்
நடுத்தெரு பால்பாண்டி
கிடேரி கன்றை ஒரு விதமாகவும்
காளைக் கன்றை ஒரு விதமாகவும்
பாலூட்டி வளர்க்கிறான்.
மாலைப் பொழுதில் கேரளாவுக்கு
மாடு தரகு செய்பவர்கள்
மதுவாங்கட்டை முழுவதும்
நிரம்பியுள்ளார்கள்.
நீர் தந்த ஆறுகளின் மணல்
லாரிகளில் கொள்ளை போக
நாம் மீசையில் மண் ஒட்டவில்லையென்று
முறுக்கிக் கொண்டு திரிகிறோம்.
கடைசியில் நாமே எதிர்க்க
வேண்டியும் இருக்கிறது
நாமே ஆதரிக்க வேண்டியும்
இருக்கிறது
இப்படி ஒரு ஆதரவும்,
எதிர்ப்பும் இருந்தால்தான்
அரசியல் பண்ண முடியும்
என்பது
நம்மை விட கட்சிகளுக்கு
நன்றாகவே தெரிந்திருக்கிறது.
*****
No comments:
Post a Comment