எழுத்து
அவரிடமிருந்த
பாவ மன்னிப்புக் குறிப்பேட்டைப்
பிடுங்கிப் பார்க்கையில்
கடைசியாக எழுதப்பட்டிருந்தது
பாவ மன்னிப்பை நம்பிச்
செய்யப்படுகின்றன
பாவங்கள் என்று.
*****
விஷேச ஆடைகள்
முப்பதுக்கு ஒரு சட்டையும்
நாற்பதுக்கு ஒரு பேண்டும்
கலைத்துக் கலைத்து. பார்த்துப்
பார்த்து
வாங்கித் தந்தாய்.
செகண்ட் ஹேண்ட் என்றாலும்
நீ வாங்கித் தந்த அன்பில்
பிரத்யேகமாக
எனக்கெனத் தைக்கப்பட்ட
விஷேச ஆடைகள் போல் இருக்கின்றன
எவரோ எத்தனை முறையோ
உடுத்திய ஆடைகள்.
*****
No comments:
Post a Comment