5 Aug 2022

வெயில் மழைப் பேச்சு

வெயில் மழைப் பேச்சு

வீட்டை விட்டுக் கிளம்பும் போது பேசுகிறார்

மாலை வீடு திரும்பியதும் பேசுகிறார்

கேட்டைத் திறந்தால் பேச்சு

மூடினால் பேச்சு

கடையில் காபி சாப்பிட கிளம்பினால் பேச்சு

சாப்பிட்டுத் திரும்பினால் பேச்சு

சீக்கிரம் வாடகையைக் கொடுத்து விட வேண்டும்

என்றுதான் நினைக்கிறேன்

கொடுத்து விட்டால்

அடுத்து இருபது நாட்களுக்குப் பேச்சுக் கொடுக்க மாட்டார்

யாரும் பேசாத வீட்டில்

நான் ஊமையாகவா இருக்க முடியும்

வாடகை வேண்டுமென்றால் பேசட்டும்

பேச்சில் தெரிந்து கொள்ள

எவ்வளவு இருக்கிறது

இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படலாம்

வறண்ட வானிலை நிலவலாம்

பேச்சின் மூலம்தானே தெரிய வருகிறது

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...