5 Aug 2022

என்னவோ போ

என்னவோ போ

அடிபட்டு விட்டது

ரத்தம் வழிகிறது

மருந்து கொண்டு வா

மருந்து வந்தாயிற்று

ரத்தம் நின்றாயிற்று

கொண்டு வந்த மருந்தை

இனி

நான் கொண்டு போய் வைக்க வேண்டும்

ஆண்டவன் புண்ணியத்தில்

அடிபடாமல் இருந்திருக்கலாம்

புண்ணியம் இல்லாத ஆண்டவன்

என்று சொன்னால்

புரியவா போகிறது

*****

No comments:

Post a Comment