4 Aug 2022

மிஸ்டர் கவிஞர் அவர்கள்

மிஸ்டர் கவிஞர் அவர்கள்

உன் மேல் விழுந்த மழைத்துளிக்கு

எத்தனை கிராக்கி

கவிஞர்கள் கிறுக்கித் தள்ளுகிறார்கள்

ஒரு துளி கொடேன்

தீர்த்தமென்று குடித்துக் கொள்வார்கள்

என்று பார்த்தால்

பிஸ்லேரி வாட்டர்தான் வேண்டும் என்கிறார்கள்

இனிமேலாவது

மழையில் நனையும் நேரத்தில்

கவிஞர்களை அருகில் அண்ட விடாதே

தலைவர்களைப் போலப் புளுகித் தள்ளுகிறார்கள்

என்று பலமுறை சொல்லி விட்டேன்

நீயோ மழைநீரைச் சேமிக்கலாம்

என்று அவர்கள் சொல்வதை நம்பித் தொலைக்கிறாய்

இனி உன் பாடு

கவிஞர்கள் பாடு

மழையில் நனைந்தால் ஜலதோசம் பிடிக்காமல் பார்த்துக் கொள்

மூக்குச்சளியைப் பற்றி

கிறுக்கத் தொடங்கி விடுவார்கள் பார்த்துக் கொள்

*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...