இந்தக் கவிதை எப்படி பிறக்கிறது என்றால்
இந்தக் கவிதை திட்டவட்டமாக
எப்படியோ வருகிறது
அன்றொரு நாள் பூனை கடித்த
போது
பிறிதொரு நாள் கொசு கடித்த
போதும்
பாம்பு கடி என்றதால்
பயந்தோடி ஓடி விட்டதால்
நாய் துரத்திக் கொண்டோடிய
ஒரு பொழுதில்
காக்கா கடி கடித்து
கமர்கட் கொடுத்த நாட்களில்
கரப்பான பூச்சி எட்டுக்கால்
பூச்சி கடித்த
மூட்டைப் பூச்சி கடித்த
சொல்ல மறந்து விட்டேன் பார்
மூஞ்சூறு கடித்த நாளில் கூட
கவிதை கனன்று எழுந்திருக்கிறது
சொன்னால் நம்ப மாட்டாய்
ஸ்பைடர் கடித்து ஸ்பைடர்
மேன் உருவாவது போல
கவிதை கடித்து கவிஞன் ஆகி
அந்தர வெளியில் சுந்தர பிரவாகத்தில்
பொங்கி வழிந்து கொண்டிருக்கிறது
கவிதை
வேண்டுபவர்கள் பிடித்துக்
கொள்ளலாம்
என்ன செய்வது
வேண்டாதவர்கள் அதிகம் இருக்கிறார்கள்
*****
No comments:
Post a Comment