3 Dec 2018

அதிசயமாகப் பார்ப்பதற்கு யாரும் பொருப்பில்லை


அதிசயமாகப் பார்ப்பதற்கு யாரும் பொருப்பில்லை
எஸ்.கே.வுக்கு அன்று மனநிலை அப்படித்தான் இருந்தது. ஒரு வித ஏகந்தாமாக. அது குறித்து அவர் இப்படி எழுதினார்,
எனக்கு நேர்ந்தது உங்களுக்கும் ஒத்து வரும் என்று சொல்வதற்கில்லை. அது ஏதோ நடந்தது. அவ்வளவுதான். அதன் காரண காரியங்களை ஆராய்ந்து பார்ப்பதற்கான சுறுசுறுப்பு எனக்கில்லை. அது ஏதோ நடந்தது நடந்ததாக இருக்கட்டும் என்று விட்டு விட்டேன். இனி நடக்கப் போவது குறித்து ஆராயவும் ஆர்வமில்லை. அவ்வளவு அலுப்பாக இருக்கிறது. அதனால் அதையும் அப்படியே விட்டு விட்டேன். அதனால் எல்லாம் அப்படி அப்படியே கிடக்கிறது. அதனால் நான் ஏதோ எல்லாவற்றிலிருந்து விடுபட்டு விட்டவன் போல் தோன்றலாம். அது உண்மையில்லை. எனக்குப் பிடிக்கவில்லை. விலகி விட்டேன். அது சிலருக்குக் கடினமாக இருக்கலாம். அதற்காக நான் இருக்கும் நிலையை அதிசயமாகப் பார்ப்பதற்கு நான் பொருப்பில்லை.
*****
மனநிம்மதியும், மன அமைதியும் அத்துடன் மனதளவில் எது நிதானம் தருகிறதோ அதுவே பிரார்த்தனை.
*****

No comments:

Post a Comment

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர்

பெருங்கூட்டப் பிரவாகத்தில் நீங்கள் ஒரு சிற்றுயிர் ஒவ்வொருவரும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நெறிமுறைகள் வழங்கப்படுகின்றன பெ...