எழுத்துச் சம்சாரிகள்
கவிதையா
சிறுகதையா எனும்
முடிவைப்
போல்தான்
காதல்
திருமணமா நிச்சயத் திருமணமா எனும் முடிவும்
ஓர்
உவமைக்காகச் சொல்லப்பட்டது என்பதால்
காதல்
திருமணத்தைக் கவிதைக்கும்
நிச்சயத்
திருமணத்தைச் சிறுகதைக்கும்
பொருத்தி
விடும் அபத்தத்தைச் செய்யாது இருப்பீர்களாக
அவரவர்க்குப்
பிடித்த இடத்தில்
அவரவர்
நிற்பர்
எதுவும்
பிடிக்கவில்லை என்பவர்கள்
ஒரு
ஜோக்கை வாசித்துப் பாருங்கள்
பார்வைக்கு
ஏற்ப மாறும்
பச்சோந்திப்
படைப்பைப் பார்க்கும் போது
அசந்து
போவீர்கள்
சன்மானங்களை
நீங்கள் கேட்க வேண்டாம்
அவர்கள்
தருவார்கள்
எழுத்தில்
எப்படி வியாபாரம் என்றால்
எதற்கும்
ஆயிரம் வழிகள்
எழுத்தில்
எப்படி நேர்மை என்றால்
அதற்கும்
ஒரு வழி
தராசு
முள் குத்த மேலேறி நிற்பது
*****
No comments:
Post a Comment