3 Dec 2018

கால பயம்


கால பயம்
இரவு இரவாக நீடித்திருக்கலாம்
இரவு பகலானதில்
எம கண்டம் வந்தது
ராகு, குளிகை ஏற்பட்டது
அஷ்டமி, நவமி, கரிநாள் கணக்கு
விடியாத இரவில் உறக்கம் ஒன்றே இருந்தது
விடிந்து விட்ட இரவில்
ஏதேதோ வந்து சேர்கிறது
பகலுக்குள் விழித்தெழாத உற்சவத்தை
கனவுக்குள் வாழ அனுமதித்தீர்கள் என்றால்
நல்ல நேரத்திலா கெட்ட நேரத்திலா
அச்சாகி கைகளில் வந்த
பஞ்சாங்கத்தில் நெளியும் பாம்பைக் கண்டு
பயப்பட மாட்டேன்
*****

No comments:

Post a Comment

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்!

‘திரும்பிப் போ’வும் ‘வெளியே போ’வும் – காவாச் சொற்கள்! அண்மைக் காலத்தில் எக்ஸ் தளத்தில் பரபரப்பான இரண்டு சொல்லாடல்கள் ‘திரும்பிப் போ’ என்பத...