டிப்ரஷன் – ஒரு டெக்னிக்கல் ரிப்போர்ட்!
திடீரென்று
வரும். காரணம் இல்லாமல் கதவைத் தட்டும். அது மனச்சோர்வு என்று நமக்குப் புரியும் முன்னரே,
கன்னாபின்னாவென்று சில முடிவுகளை எடுக்க வைக்கும். விளைவு? யாரிடமாவது காரசாரமாக எகிறிவிட்டு,
அப்புறம் ஏன் இப்படிச் செய்தோம்? என்று தலையில் அடித்துக் கொள்ள வேண்டியிருக்கும்.
இதை எதிர்கொள்ளும்
விதமாகச் சமீபகாலமாக ஒரு டெக்னிக்கைக் கையாள்கிறேன். அது கவனித்தல். மனிதர்களைக் கவனிப்பது.
வாயைத் திறந்து எதையும் கொட்டிவிடாமல், அப்படியே அவர்களை ஸ்கேன் செய்வது. நிதானம் உள்ளே
மெல்லக் குடியேறுகிறது. சிக்கல்கள் குறைகின்றன.
அப்படிக் கவனித்ததில்
அண்மையில் எதிர்கொண்ட ஒரு குணச்சித்திர கேரக்டர். அந்த அம்மாவுக்கு ஏகப்பட்ட ஆதங்கம்.
அப்போ அந்தப் பயலுவோகிட்ட என் பொண்ணுங்கள கல்யாணம் பண்ணிக்கோன்னு கெஞ்சோ கெஞ்சுன்னு
கெஞ்சினேன். ஒரு பயலும் அப்போ கண்டுக்கல. இப்போ என் பொண்ணுங்க எல்லாம் கல்யாணம் முடிஞ்சு
போயிட்டாங்க. நான் பேரன் பேத்திகளப் பார்த்துட்டேன். ஆனா அந்தப் பயலுங்க இன்னும் அரைக்
கெழவனா ஆகிக்கிட்டு சுத்துறானுங்க என்றார் ஆவேசமாக.
நான் என்ன
சொல்லப் போகிறேன் என்று என் முகத்தையே பார்த்தார். நான் சொன்னேன் வெயிலோட அருமை நிழல்ல
தெரியும்மா. அந்த ஒரு வரி பஞ்ச் அவருக்குப் போதுமானதாக இருந்தது. முகத்தில் அத்தனை
சந்தோஷம். தன் கரங்களை என் முகத்துக்கு அருகே கொண்டு வந்து அப்படியே நெட்டி முறித்தார்.
மனச்சோர்வு அப்படியே முறிந்தது போல இருந்தது.
இப்படியாக
அந்தக் கதை முடிந்தது.
உடல் உழைப்பு
என்பதும் மற்றபடி மனச் சோர்வுக்கு ஒரு நல்ல ஆன்டி பயாடிக். ஆனால், தோல்விகள் தொடரும்போதுதான்
சிக்கல் ஆரம்பிக்கிறது.
தூக்கமில்லாத
இரவுகள் ஒரு ரெட் சிக்னல். சில மருந்துகள் தற்காலிகமாக உதவினாலும், பிரச்சனை வேறு.
செய்கிற காரியமெல்லாம் தப்போ என்கிற சந்தேகம். கூடவே ஒரு தாழ்வு மனப்பான்மை. ஒரு விதமான
டிப்ரஷன் லூப்.
இதற்கு ஒரே
வழி எதிர் வினையாற்றுவது மற்றும் தன்னம்பிக்கை ஊட்டும் பக்கங்களைப் புரட்டுவதுதான்
இப்போதைக்கு என் ரிலீஃப். அப்துற் றஹீமின் புத்தகம் ஒன்று கண்ணில் பட்டது. ஒரே வாயில்
சாரி, ஒரே மூச்சில் முடித்து விட்டேன். ரீ-சார்ஜ் ஆனது போல ஒரு உணர்வு. டெம்ப்ளேட்டான
விசயங்கள்தான் என்றாலும், காலையில் எழுந்ததும் பல் துலக்காமல் இருக்க முடியுமா? இப்போது
மனசு குளோசப் பேஸ்ட் போட்டு துலக்கியதைப் போல புத்துணர்ச்சியாக இருக்கிறது. வேண்டுமானால்
நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்.
*****

No comments:
Post a Comment