பிப்ரவரி 14 தினக் கவிதை!
கை பரபரவென்கிறது.
இந்தத் தினத்தில் எப்படி எழுதாமல் இருக்க முடியும்? காதலர் தினத்தில் ஒரு காதல் கவிதை
இல்லையென்றால். அதை விட வேறு என்ன அசம்பாவிதமாக நடந்து விட முடியும். அப்படி ஒன்று
நடந்து விடக் கூடாது என்பதற்காக இப்படி!
இதென்ன
காதலர் தினம் என்று கூத்து
உன்னுடன்
இருக்கும் ஒவ்வொரு நாளும்
காதலர்
தினம்தானே!
உன்னுடன்
இருக்கும் ஒவ்வொரு மணி நேரமும்
காதலர்
நேரம்தானே!
உன்னுடன்
இருக்கும் ஒவ்வொரு நிமிடமும்
காதலர்
நிமிடம்தானே!
உன்னுடன்
இருக்கும் ஒவ்வொரு நொடியும்
காதலர்
நொடிதானே!
உன்னுடன்
வாழும் ஒவ்வொரு ஆண்டும்
காதலர்
ஆண்டுதானே!
தயவுசெய்து
காதலர் தினம் என்று
ஒரு
நாளைக் குறிப்பிடாதீர்கள்!
இதைப்
படித்து விட்டு
காதலர்
நேரம்
காதலர்
நிமிடம்
காதலர்
நொடி
காதலர்
ஆண்டு
என்று
எதையும் உருவாக்கி விடாதீர்கள்!
உயிருடன்
இருக்கும் ஒவ்வொரு நொடியும்
சுவாசித்துதானே
ஆக வேண்டும்!
உன்னுடன்
இருக்கும் ஒவ்வொரு நாளும்
காதலர்
தினமாகத்தானே இருக்க வேண்டும்!
ஒருவேளை
காதலர் தினம் என்ற ஒன்று வேண்டுமென்றால்
உன்
பிறந்த தினம்தான்
நம்
காதலர் தினம்!
அதில்
உனக்கு உடன்பாடில்லை என்றால்
நாம்
முதல் முதலில் சந்தித்த தினம்
நம்
காதலர் தினமாக இருக்கட்டும்!
அதிலும்
உனக்கு உடன்பாடு இல்லாவிட்டால்
நம்
திருமண நாள் காதலர் தினமாக இருக்கட்டும்!
அதிலும்
உனக்கு உடன்பாடு இல்லாவிட்டால்
நம்
செல்ல மகளின் பிறந்த நாளே
நம்
காதலர் தினமாக இருக்கட்டும்!
*****
No comments:
Post a Comment