1 May 2017

நாமே நிலக்கரி!நாமே பெட்ரோலியம்!


நாமே நிலக்கரி!நாமே பெட்ரோலியம்!
இந்த நகரங்கள் நட்சத்திரங்கள் பூத்தாற் போல ஒளிர
எந்நேரமும் குளிர்சூழ் ஏ.சி.கள் உறும
நெடுந்தொலைவு நேரத்தை
சிறுநொடியில் கடக்கும் வாகனங்கன் விரைய
சேனல்களும், கணினித் திரைகளும்
மின்னொளியில் எந்நேரமும் காட்சிகளைக் கக்கிக் கொண்டிருக்க
நிலக்கரியையும், பெட்ரோலியத்தையும்
பூமியிலிருந்து எடுத்து
மின்சாரம் பெருக்கி, நேரம் சுருக்கி
பருவநிலை மாற்றங்களை உருவாக்கி
ஏதேதோ செய்து கொண்டிருப்போம்
ஒரு நாளில் நாமும் புதையுண்டு
நிலக்கரியாகவும், பெட்ரோலியமாகவும்
இன்னொரு தலைமுறைக்கு மாற.
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...