1 May 2017

மனதுக்குள் மாசுமணி


மனதுக்குள் மாசுமணி
            மகளிர் தின கூட்டத்திற்குச் செல்வதாகச் சொன்ன மனைவியை மனதுக்குள்ளே திட்டித் தீர்த்தான் பெண்ணுரிமைப் போராளி மாசிலாமணி.
*****
வருத்தம்
            "நெடுஞ்சாலைகளில் மூவாயிரத்துக்கு மேல டாஸ்மாக்கா? இது தெரியாமா லாரிக்கு கிளீனரா வந்த வேலைக்குப் போகாம இருந்துட்டேனே!" மனதுக்குள் வருத்தப்பட்டான் தம்பு.
*****
ஆல் இஸ் ஒன்
            "பேர்லதான் வேற. எல்லா கட்சியும் ஒண்ணுதான்!" என்ற அப்புசாமியைக் குழப்பமாகப் பார்த்தவர்களுக்கு அவரே பதில் சொன்னார், "ஓட்டுக்குப் பணம் கொடுக்குறதுல எல்லா கட்சியும் ஒண்ணுதான்ல!"
*****

No comments:

Post a Comment

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா?

திருக்குறள் என்பது கோடானு கோடி பாட்டா? விடிவதற்குள் ஒரு இரவில் நான்கு கோடி பாடல்களைப் பாடும் வல்லமை உள்ளவர்கள் நாட்டில் உள்ளார்களா எனச் சவ...