1 May 2017

டிஜிட்டல் கவலை


கல கல கலை
            "ரசிகர் மன்றங்களை கலைச்சிட்டு கட்சியா மாத்திப் பார்ப்போம். ஒத்து வரலைன்னா மறுபடியும் கட்சியைக் கலைச்சிட்டு ரசிகர் மன்றங்களா மாத்திப்போம்!" ஐடியா சரியானதாகவேப் பட்டது யுனிவர்சல் ஸ்டாருக்கு.
*****
காலி
            "வருசத்துக்கு இப்படி நாலு இடைத்தேர்தல் நடந்தா அப்புறம் கட்சியோட கஜானா காலியாயிடும்!" பதறினார் கட்சியின் பொருளாளர்.
*****
டிஜிட்டல் கவலை
            "டிஜிட்டல் இந்தியாங்றாங்க. இன்னும் நோட்டாகவே கொடுக்கிறானுங்களே. இவனுங்க எப்பத்தான் மாறப் போறானுங்க!" பே.டி.எம்.வசதியோடிருந்த இடைத்தேர்தல் தொகுதிவாசிக்கு எதிர்கால டிஜிட்டல் இந்தியா குறித்துக் கவலையாக இருந்தது.
*****

No comments:

Post a Comment

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது?

ஏன் இந்த மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போகிறது? பல நேரங்களில் மனிதச் சமூகத்தைப் பிடிக்காமல் போய் விடுகிறது. அப்படியானால், மாட்டுச் சமூகம...