தாவரங்களின் தற்கொலை ஒப்பந்தம்! – ஒரு குறுங்கதை!
சந்துரு
கொடைக்கானலில் இருந்து திரும்பும்போது அவனது கார் ஒரு நகரும் நந்தவனத்தைப் போலிருந்தது.
பின்சீட்டில் அமர்ந்திருந்த அவன் மனைவி, குழந்தைகளை விட, அங்கிருந்த பூச்செடிகளுக்குத்தான்
அதிக ஆக்சிஜன் கிடைத்துக் கொண்டிருந்தது.
சார்,
இது பாளையங்கோட்டை வெயில்ல கூடப் பக்காவா கிளம்பும் பூச்செடி சார், என்று அந்த நர்சரி
வியாபாரி சொன்னபோது, சந்துருவின் அறிவு ஒரு நிமிடம் சுவிட்ச் ஆப் ஆனது.
அந்த
வியாபாரி கண்களை உருட்டி, இதோ பாருங்க, இது ஸ்பெஷல் உரம். இதைப்போட்டா செடிக்குக் கொடைக்கானல்ல
இருக்கிற மாதிரியே ஒரு பீல் இருக்கும், என்று ஒரு பாக்கெட் சாம்பலை ஆயிரம் ரூபாய்க்கு
விற்றபோது, சந்துரு அதை ஒரு புனிதப் பிரசாதமாக வாங்கிக்கொண்டான்.
சென்னை
வந்து சேர்ந்த அன்று இரவு, அந்தச் செடிகள் காரின் பின் சீட்டை விட்டு வெளியே வந்தன.
அடுத்த
நாள் காலை.
சூரியன்
தனது வழக்கமான சுடுவேன் என்கிற கடமையைச் செய்ய ஆரம்பித்தது.
சந்துருவின்
பால்கனியில் வைக்கப்பட்டிருந்த அந்த மலைப்பிரதேசச் செடிகள், சுற்றுமுற்றும் பார்த்தன.
அவற்றுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
ஏய்!
மேகம் எங்கே? என்று பக்கத்தில் இருந்த கறிவேப்பிலைச் செடியிடம் கேட்டன அந்த மலைச் செடிகள்.
கறிவேப்பிலைச்
செடி அலுப்புடன் சொன்னது, இங்கே மேகம் வராது. மேல ஏசி அவுட்டோர் யூனிட்ல இருந்து சுடு
காத்துதான் வரும். பேசாம சரண்டர் ஆயிடுங்கள்.
சந்துரு
ஓடி வந்து அந்தச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினான். நர்சரிக்காரன் கொடுத்த மாயாஜால
உரத்தைத் தூவினான்.
அந்த
உரம் மண்ணில் பட்டதும், செடிக்கு இன்னும் வினோதமாக இருந்தது. அது ஒரு சர்க்கரை நோயாளிக்கு
ஜிலேபி ஊட்டுவது போலிருந்தது.
மூன்றாம்
நாள், அந்தச் செடிகள் ஒரு முக்கியமான முடிவை எடுத்தன. பனிப்புகை இல்லாத இடத்தில் பூப்பதைக்
காட்டிலும், ஒரு கௌரவமான மரணம் மேல், என்று அவை தீர்மானித்தன. மெல்லத் தங்களது பச்சை
நிறத்தைக் குறைத்துக்கொண்டு, ஒரு விதமான மெரூன் நிறத்திற்கு மாறின.
சந்துரு
பதறினான். நேத்து வரைக்கும் நல்லாத்தானே இருந்துச்சு? என்று கூகுளில் தேடினான். கூகுள்
நூறு பதில்களைச் சொன்னது. அவன் அத்தனையையும் செய்தான்.
ஆனால்,
அந்தச் செடிகள் ஒரு பிடிவாதமான காந்தியைப் போல ஒத்துழையாமை இயக்கத்தில் இருந்தன.
ஏழாம்
நாள் காலை.
சந்துரு
பார்த்தபோது, அந்தச் செடிகள் ஒவ்வொன்றும் காய்ந்த குச்சிகளாக மாறியிருந்தன. பக்கத்தில்
இருந்த உர பாக்கெட் கேலியாகச் சிரித்தது.
சந்துருவின்
மனைவி சொன்னாள், அப்பவே சொன்னேன், அங்கேயோட அதுகளப் பார்க்கிறதோட நிறுத்திக்கலாம்னு.
இப்போ பாருங்க, ஐயாயிரம் ரூபாய் காலி, மனசுக்கும் கஷ்டமா இருக்கு.
சந்துரு
காய்ந்த செடிகளைப் பார்த்தான்.
அந்தச்
செடிகள் செத்துப்போகவில்லை, அவை மீண்டும் மண்ணாக மாறியிருந்தன. அந்தச் செடிகளுக்குத்
தெரியும், தாங்கள் கொடைக்கானலில் இருந்தால் இன்னும் சில மாதங்கள் வாழ்ந்திருக்கலாம்
என்று. ஆனால், சந்துருவின் ஆசைக்குத் தீனி போட அவை தயாராக இல்லை.
சந்துரு
மெல்ல அந்தச் செடிகளைத் தூக்கி குப்பைத் தொட்டியில் போட்டான். கார்ப்பரேஷன்காரர்கள்
அள்ளிக் கொண்டு போனார்கள்.
அன்று
மாலை, அவன் அதே பால்கனியில் அமர்ந்து கொடைக்கானலில் எடுத்த போட்டோக்களைப் பார்த்துக்
கொண்டிருந்தான். அதில் அந்தச் செடிகள் இன்னும் பச்சையாக, விதிவிதமாக பூத்து இருந்தன.
சந்துரு
முணுமுணுத்தான், ஐயாயிரம் நட்டம், ஏமாளி பட்டம்.
*****

No comments:
Post a Comment