மெமரி அத்லெட்ஸ் – மூளைச் சர்க்கஸ்!
ஜோஷுவா
போயர் என்பவர் அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு ஜர்னலிஸ்ட். அவ்வப்போது தன் சொந்த சோஷியல்
செக்யூரிட்டி நம்பரையே மறந்துவிடும் ரகம். நம் ஊரில் பின் நம்பரை மறந்து விடுவதைப்
போல என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
அவருக்கு
ஓர் ஆசை தன் ஞாபக சக்தியை வளர்த்துக்கொள்ள முடியுமா? அப்படியே யுஎஸ்ஏ மெமரி சாம்பியன்ஷிப்பில்
கலந்துகொண்டால் என்ன? இது கொஞ்சம் அதிகப்படியான ஆசைதான் ஜோஷுவா போயருக்கு.
ஆனால்
அங்கே இருப்பவர்கள் சாதாரண ஆட்கள் இல்லை. அவர்கள் மெண்டல் அத்லெட்ஸ். அதாவது, மூளையை
வைத்து மாரத்தான் ஓடுபவர்கள்.
சரி
களத்தில் கலந்து கொள்ளாவிட்டாலும், பார்வையாளாராகக் கலந்து கொண்டால் என்ன? சில, பல
விசயங்களைத் தெளிவு செய்து கொள்ளலாம் அல்லவா!
அமெரிக்காவில்
அப்போது இந்த விளையாட்டு அவ்வளவு பிரபலம் இல்லை. இதனாலேயே, அமெரிக்கர்களுக்கு எதிர்காலத்தைப்
பற்றித்தான் கவலை, ஐரோப்பியர்களுக்குத்தான் கடந்த காலத்தின் மீது, அதாவது ஞாபகங்களின்
மீது காதல், என்று ஒரு கிண்டல் உண்டு. அதனால், விஷயத்தைக் கற்றுக்கொள்ள ஜோஷுவா ஆக்ஸ்போர்டு
பல்கலைக்கழகத்திற்குப் பயணமானார்.
அங்கே
நடப்பது உலக மெமரி சாம்பியன்ஷிப். அது ஓர் அறிவுப் போர். அங்கே அவர் சந்தித்த குண்தர்
கார்ஸ்டன் ஒரு விசித்திரமான கேரக்டர். காதுகளில் கறுப்பு நிற மஃப்ஸ், கண்ணாடியில் இரண்டு
சின்னத் துளைகளைத் தவிர மற்ற இடமெல்லாம் டேப் ஒட்டப்பட்டிருக்கிறது.
வெளிப்புறத்
தொந்தரவுகள் இருக்கக்கூடாது, என்கிறார் அந்த மெமரி காட்ஃபாதர். அவரிடம் ஒரு மெட்டல்
சூட்கேஸ் இருந்தது. உள்ளே 30 கட்டு சீட்டு கட்டுகள். எங்கே அவருடைய எதிராளி பென் ப்ரிட்மோர்
அதைப் பற்றித் தெரிந்து கொள்வாரோ என்று ரகசியம் காக்கிறார்.
அங்கே
நடக்கும் போட்டிகள் மலைக்க வைப்பவை. 15 நிமிடத்தில் 280 ரேண்டம் வார்த்தைகள், அரை மணி
நேரத்தில் 4,140 பைனரி எண்கள் (0, 1, 0, 1...), ஒரு மணி நேரத்தில் 27 கட்டு சீட்டுகள்
என இவற்றை வரிசைப்படி மனப்பாடம் செய்வது.
இதில்
மிகவும் கஷ்டமான விஷயம் கவிதை மனப்பாடம் செய்வதுதான். வார்த்தைக்கு வார்த்தை மாறாமல்
இருக்க வேண்டும். Dead என்பதில் D கேபிடல் இல்லையென்றால் மார்க் போச்சு!
இப்போது
நினைவாற்றால் பற்றிய சில விசயங்களை நினைவுக்குக் கொண்டு வருவோம்.
நினைவாற்றலில்
இரண்டு வகை உண்டு.
ஒன்று,
ஒரு விஷயத்தின் சாராம்சத்தை ஞாபகம் வைத்துக்கொள்வது.
மற்றொன்று,
வார்த்தைக்கு வார்த்தை மனப்பாடம் செய்வது.
ரோமானிய
அறிஞர் சிசரோ, சாராம்சத்தை ஞாபகம் வைப்பதையே விரும்பினார். இதற்கு அவர் பயன்படுத்தியது
லோசி முறை. அதாவது, ஒரு கருத்தை ஒரு இடத்தோடு பொருத்திப் பார்ப்பது. இதிலிருந்துதான்
In the first place… என்ற வாக்கியமே வந்தது.
1973
இல் வாட்டர்கேட் ஊழலின் போது ஜான் டீன் என்பவர் நிக்ஸன் பேசியதை அப்படியே ஒப்புவித்தார்.
அவரை மனித டேப் ரெக்கார்டர் என்றார்கள். ஆனால் நிஜமான டேப் ரெக்கார்டரோடு ஒப்பிட்டுப்
பார்த்தபோது, அவர் பல வார்த்தைகளைத் தப்பாகச் சொல்லியிருந்தது தெரிந்தது. ஆனால் அவர்
சொன்ன விஷயம் சரியாக இருந்தது. நம் மூளை ஒரு எபிஷியன்ட் மெஷின். அது தேவையில்லாத அலங்கார
வார்த்தைகளை விட, கருத்தைத்தான் பிடித்துக்கொள்கிறது.
சரி
இப்போது போட்டிக்கு வந்து விடுவோம்.
போட்டியின்
இறுதியில் குண்தர் தோற்றுப்போனார். ஒரு 18 வயது மாணவன் சாம்பியன் ஆனான்.
ஆக்ஸ்போர்டின்
அந்தப் புராதனமான ஹாலில் உட்கார்ந்து யோசித்தபோது ஜோஷுவா போயருக்கு ஒன்று மட்டும் புரிந்தது.
ஒரு காலத்தில் மனிதர்கள் தங்கள் அறிவை வளர்க்க ஞாபக சக்தியைத்தான் பெரும் முதலீடாகக்
கருதினார்கள். புத்தகங்கள் இல்லாத காலத்தில் மூளைதான் லைப்ரரி.
இன்று
நமக்கு எல்லாவற்றிற்கும் ஷார்ட்கட் கிடைத்துவிட்டது. மொபைல் இருக்கிறது, கூகுள் இருக்கிறது.
நாம் எதையாவது மறந்துவிட்டால், ஐயோ, மூளை வேலை செய்யவில்லை, என்று குறை சொல்கிறோம்.
ஆனால் உண்மை என்னவென்றால், நாம் எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது என்பதையே மறந்துவிட்டோம்!
அப்புறம்,
ஜோஷுவா போயர் உற்சாகமாக நாடு திரும்பினார். ஞாபகச் சக்தி பற்றி அவருக்கு நிறைய தெளிவுகள்
கிடைத்திருந்தன. உங்களுக்கும் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்.
*****

No comments:
Post a Comment