கூகுள் மெமரி – மூளை ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க்!
கி.மு.
370.
அந்தக்
காலத்து அறிஞரான சாக்ரடீஸ் ஒரு விஷயத்தைக் கடுமையாக எதிர்த்தார்.
"இந்தக்
கண்டுபிடிப்பு மனிதர்களிடம் மறதியை உண்டாக்கும். எதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளும் பயிற்சியே
இல்லாமல் போய்விடும்" என்று எச்சரித்தார்.
அவர்
எதைச் சொன்னார் தெரியுமா?
எழுத்து
வடிவத்தை!
அன்று
'எழுத்து' மெமரியைக் கொல்லும் என்றார்கள்.
1400களில்
அச்சு இயந்திரம் வந்தபோது, "இனிமேல் மடாலயத்தில் இருப்பவர்கள் சோம்பேறி ஆகிவிடுவார்கள்"
என்று கவலைப்பட்டார்கள்.
இப்போது
நம் முறை.
"இணையமும்,
ஸ்மார்ட்போனும் நம் கவனத்தைச் சிதறடிக்கின்றன, மூளையை மழுங்கடிக்கின்றன" என்று
அலறுகிறோம்.
ஓர்
ஆய்வுத் தகவலின்படி, வேலை நேரத்தில் ஒவ்வொரு இரண்டு நிமிடத்திற்கும் ஒருமுறை மின்னஞ்சல்,
சேட் என்று நம் கவனம் சிதறடிக்கப்படுகிறதாம்.
ஒரு
காலேஜ் மாணவர் தன் கிளாஸ் நேரத்தில் 20 சதவீத நேரத்தை வாட்ஸ்அப் செய்வதிலும், கேம்
விளையாடுவதிலும் செலவிடுகிறாராம்.
இதன்
விளைவு?
2000இன்
தொடக்கத்தில் 12 விநாடிகளாக இருந்த மனிதனின் கவனம் செலுத்தும் நேரம், இப்போது 8 விநாடிகளாகக்
குறைந்துவிட்டது. பாவம், ஒரு தங்க மீனுக்கு கூட 9 விநாடிகள் கவனம் இருக்குமாம்!
இப்போது
நாம் வெயிட்டர் எபெக்ட் என்கிற ஒரு விசயத்தைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
அதாகப்பட்டது,
ஹோட்டலில் ஒரு வெயிட்டருக்கு நீங்கள் ஆர்டர் செய்த உணவை கொண்டு வந்து வைக்கும் வரை
எல்லாம் ஞாபகம் இருக்கும். பில் கட்டி முடித்த அடுத்த நிமிடம், நீங்கள் என்ன சாப்பிட்டீர்கள்
என்று கேட்டால் அவருக்குத் தெரியாது. இதைத்தான் வெயிட்டர் எபெக்ட் என்கிறார்கள். இன்று
பலரும் இந்த வெயிட்டர் எபெக்டோடேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
அப்புறம்
இந்தச் சோசியல் மீடியாக்கள் இருக்கின்றனவே. இதனால் மூளைக்கு என்ன நடக்கிறது தெரியுமா?
பேஸ்புக்,
இன்ஸ்டாகிராம் உரையாடல்கள் பல நேரங்களில் அரைகுறையாகவே நிற்கின்றன. இந்த முடிவடையாத
வேலைகள் நம் மூளையை ஒருவித பதற்றத்திலேயே வைத்திருக்கின்றன.
மெமரி
ஹவுஸ்கீப்பிங் செய்ய மூளைக்கு ஓய்வு தேவை. ஆனால் நாம் அந்த ஓய்வு நேரத்தை இன்ஸ்டாகிராம்
ரீல்ஸ் பார்த்து நிரப்புகிறோம்.
ஆக என்ன
நடந்தாலும், இன்னொரு விசயத்தையும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
அது
என்னவென்றால், அது ஓர் ஆய்வு சம்பந்தப்பட்டது.
இப்படி
ஓர் ஆய்வு நடத்தப்பட்டது.
அதாகப்பட்டது,
சில தகவல்களை கம்ப்யூட்டரில் டைப் செய்யச் சொன்னார்கள்.
ஒரு
குரூப்பிடம் "நீங்கள் டைப் செய்தது சேவ் ஆகிவிடும்" என்றார்கள்.
இன்னொரு
குரூப்பிடம் "இது டெலிட் ஆகிவிடும்" என்றார்கள்.
ரிசல்ட்?
சேவ்
ஆகும் என்று தெரிந்தவர்கள் அந்தத் தகவலை ஞாபகம் வைத்துக்கொள்ளவே இல்லை. ஆனால், அந்தத்
தகவல் எந்த போல்டரில் இருக்கிறது என்பதை மட்டும் கச்சிதமாக ஞாபகம் வைத்திருந்தார்கள்.
டெலிட்
ஆகிவிடும் என்று தெரிந்தவர்கள் டைப் செய்ததைக் கச்சிதமாக ஞாபகம் வைத்துக் கொண்டார்கள்.
இப்போது
அந்த முதல் கேஸை எடுத்துக் கொள்ளுங்கள்.
இங்கே,
மூளை இப்போது டேட்டாவை சேமிப்பதை விட, அந்த
டேட்டா எங்கே இருக்கிறது என்பதைச் சேமிக்கப் பழகிவிட்டது.
இதை
காக்னிட்டிவ் ஆப்லோடிங் என்கிறார்கள்.
அனைவரது
மூளையும் இந்த முறையில்தான் தற்போது ஒரு எக்ஸ்டர்னல் ஹார்ட் டிஸ்க் போல இணையத்தைப்
பயன்படுத்தத் தொடங்கிவிட்டது.
இணையத்தினால்
நம் அறிவு குறைகிறதா? இல்லை என்கிறார்கள் சில நிபுணர்கள்.
தகவல்களைத்
தட்டச்சு செய்து தேடுவதை விட, இணையத்தில் மேயும்போது மூளை அதிக வேலை செய்கிறது என்கிறது
ஓர் ஆய்வு.
அதாகப்பட்டது,
உண்மையில், சின்னச் சின்னத் தகவல்களை ஞாபகம் வைத்துக்கொள்ளும் வேலையை இணையத்திடம் கொடுத்துவிட்டு,
மூளை இன்னும் பெரிய விஷயங்களைச் சிந்திக்க இப்போது தயாராகிவிட்டது என்றும் சொல்லலாம்.
அன்று
சாக்ரடீஸ் பயந்தது நடக்கவில்லை. எழுத்து நம் அறிவை வளர்த்தது.
இன்று
நாமும் இணையத்தைப் பார்த்துப் பயப்படுகிறோம்.
ஆனால்
மூளை என்பது ஒரு பிளாஸ்டிக் போன்றது. நாம் எப்படிப் பயன்படுத்துகிறோமோ, அப்படி அது
தன்னை மாற்றிக்கொள்ளும். அதுதான் பிரைன் பிளாஸ்ட்டிட்டி.
அடுத்த
முறை ஏதோ ஒரு தகவலைத் தேட கூகுளுக்குப் போகும்போது ஒன்று மட்டும் நினைவில் இருக்கட்டும்.
உங்கள் மூளை சோம்பேறி ஆகவில்லை, அது அப்டேட் ஆகிக்கொண்டிருக்கிறது!
*****

No comments:
Post a Comment