எங்கே போகும் தமிழகத்தின் கடன் பாதை?
தமிழர்களாகிய
நாம் அனைவரும் லட்சாதிபதிகள் ஆகி விட்டோம்!
கையில்
இன்னும் பணம் வரவில்லை என்கிறீர்களா? அது வராது. இது கைக்கு வரும் பணம் அல்ல. தலைக்கு
வரும் பணம்.
தமிழ்நாட்டின்
கடன் 10 லட்சம் கோடி ரூபாய். அதைத் தமிழ்நாட்டின் ஏழு கோடி மக்கள்தொகையால் வகுத்துப்
பார்த்தால் தலைக்குத் தோராயமாக ஒன்றரை லட்சம் வருகிறது. அந்தத் தொகையை வைத்துப் பார்த்தால்
தமிழர்களாகிய நாமெல்லாம் லட்சாதிபதிகள்தானே.
2012
வரை இருந்த கடன்தொகை தமிழகத்துக்கு நாலரை லட்சம் கோடிக்குச் சற்றுக் கம்மி என்றால்,
அதுவே ஐந்தாண்டுகள் கழித்து 2026 இல் பார்க்கும் போது, எதையும் கழிக்க முடியாத அளவுக்குக்
கூடிப் போய் பத்து லட்சம் கோடியை எட்டி விட்டது.
கடந்த
ஐந்து வருடத்தில் மட்டும் ஆறரை லட்சம் கோடி. அதாவது, கிரிக்கெட்டில் லாஸ்ட் ஓவரில்
சிக்ஸராக விளாசுவார்களே, அப்படி எகிறியிருக்கிறது கிராஃப்.
எதிர்க்கட்சிகள்
ஓவர் கடன் என்கின்றன. எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன் என்று பெரிய புள்ளிகளை வைத்துதான்
பிளான் போடுறோம் என்கிறது தமிழக அரசு.
அப்படியானால்
இதில் இருக்கும் லாஜிக்தான் என்ன?
ஐந்து
வருடத்துக்கு முன்பிருந்த தஙகம் விலை இப்போது டபுள். அதே போக்கில் இந்தக் கடனும் டபுள்
என்று சொல்வது ஒரு வகை லாஜிக்.
ஏழு
ரூபாய் டீ கூட இப்போது பனிரெண்டு ரூபாய் என்பது இதே லாஜிக்தான். இது பணமதிப்பு சரிந்துவிட்டது
என்று சொல்லும் பண வீக்க லாஜிக்.
மத்திய
அரசுக்கே 197 லட்சம் கோடி கடன் இருக்கும் போது தமிழக அரசுக்கு இருப்பது கொசுறுதான்
என்பது வேறொரு வகை லாஜிக்.
மத்திய
அரசு ரிசர்வ் வங்கியை வைத்து பணத்தை அச்சடித்துக் கொள்ளும். தமிழக அரசால் அது முடியாது.
மத்திய
அரசுக்கு பெல், ஐஓசி, ஓஎன்ஜிசி என்று டிவிடென்ட் தரும் கம்பெனிகள் அதிகம். தமிழக அரசுக்கு
கடனில் தத்தளிக்கும் கம்பெனிகள்தான் அதிகம். ஆகையால் மத்திய அரசுக்கு இருக்கும் கடனும்
தமிழக அரசுக்கு இருக்கும் கடனும் ஒன்றல்ல. மொத்தத்தில் கடன் என்பது எந்த அரசுக்கும்
நல்லதல்ல.
ஏனிப்படி
ஆகிறது தமிழகப் பொருளாதாரம்?
தமிழகப்
பொருளாதாரத்தைப் பொதுவாக பொருளாதாரப் புள்ளிகள் விண்டோ பிரேக் எக்கானமி என்கிறார்கள்.
அதாவது கண்ணாடியை உடைப்பதும், அப்புறம் அதை மாற்றுவதும் என்று இதற்கு அர்த்தம். அதை
ஏன் உடைப்பானேன்? அதை ஏன் மாற்றுவானேன்? உடைத்தால்தானே அல்லது உடைந்தால்தானே மாற்ற
முடியும். உடைக்காமல் மாற்ற முடியாதே. ஆனால் இரண்டுமே பொருளாதாரக் கணக்கில் வேலைதான்.
தி கிட் படத்தில் சார்லி சாப்ளின் செய்வாரே, அப்படி.
அப்படி
சாலையைப் போட்டு, ஒரே வருடத்தில் அது ஜல்லியடித்தால் திரும்பவும் சாலையைப் போட்டுக்
கணக்கு எழுதினால் கணக்கில் புள்ளி ஏறும், சொத்து டவுன்சைடில் பிரயாணிக்கும்.
ஒரு
கட்டிடத்தைக் கட்டிப் பத்து வருடத்தில் மீண்டும் இடித்துக் கட்டினால் அதுவும் இதே வகையறாத்தான்.
ஒரு
சாலை என்றால், ஒரு கட்டிடம் என்றால் அதற்கான ஆயுட்காலம் என்ற ஒன்று இருக்கிறது. அந்த
ஆயுட்காலம் வரை அதை வாழ விட வேண்டும். இடையிலேயே கொன்று போட்டு உயிர் கொடுக்கக் கூடாது.
அப்புறம்,
இலவசங்களுக்கு அதிகம் செலவு செய்கிறது தமிழக அரசு என்கிற வாதமும் உண்டு. ஏழைகளுக்குக்
கொடுத்தால் அது வீண் செலவு, பணக்காரர்களுக்குக் கொடுத்தால் அது சலுகையா என்கிற எதிர்வாதமும்
இதற்கு உண்டு.
இதிலும்
ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. அரசாங்கம் ஒரு கையில் மகளிருக்கு உரிமைத் தொகை கொடுக்கிறது.
இன்னொரு கையில் அதே வீட்டுக்காரர் டாஸ்மாக்கில் அந்தப் பணத்தை ரிவர்ஸ் கியர் போட்டுக்
கொண்டு போய் கொட்டுகிறார். சமூகப் பாதுகாப்புத் திட்டத்துக்குச் செலவு செய்கின்ற பணம்,
மது வருவாய் வழியாக மறுபடியும் அரசாங்கத்துக்கே வந்து விடுகிறது என்று ஆதங்கப்படும்
சமூக மற்றும் பொருளாதார ஆர்வலர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஆதங்கப்படுவதிலும் உண்மை
இல்லாமல் இல்லை.
ஆக,
என்னதான் நடக்கிறது தமிழ்நாட்டில்?
பல நாடுகள்
கடன் வாங்குகின்றன. பல மாநிலங்கள் கடன் வாங்குகின்றன. உண்மைதான். ஆனால், கடன் வாங்காத
நாடுகளும், மாநிலங்களும் இருக்கின்றன. வருவாய் பற்றாக்குறை இல்லாமல் பட்ஜெட் போடும்
அரசுகளும் இருக்கின்றன. ஒரு டிரில்லியன் பொருளாதாரம் என்ற இலக்கோடு இருக்கும் தமிழ்நாடு
அரசு கடனில்லாத பட்ஜெட் என்ற ஓர் இலக்கை ஏன் நிர்ணயித்துக் கொள்ளக் கூடாது என்பதுதான்
இப்போதைக்கான டிரில்லியன் டாலர் கேள்வி.
*****

No comments:
Post a Comment