மெமரி டெலீட் – குறிப்பிட்ட ஒன்றை மட்டும் அழிப்பது சாத்தியமா?
ஒரு
23 வயது இளைஞன் கிளினிக் கதவைத் தட்டுகிறான். டாக்டர், என் மூளையில் இருக்கும் அந்த
ஒரு குறிப்பிட்ட நினைவை மட்டும் டெலீட் செய்ய முடியுமா? என்னால் தூங்க முடியவில்லை,
என்று கெஞ்சுகிறான்.
அது,
அவனுடைய காதலி அவனை ஏமாற்றிய துயரமாக இருக்கலாம், அல்லது ஒரு போர்க்களத்தில் சக வீரர்களை
இழந்த அதிர்ச்சியாக இருக்கலாம். இதற்கு நாம் அனுமதி கொடுக்கலாமா? அவன் எந்த அளவுக்குப்
பாதிக்கப்பட்டிருக்கிறான் என்பதைப் பொறுத்து அதற்கு ஓ.கே சொல்லலாம்.
ஆனால்,
நினைவாற்றல் என்பது ஒரு பைல் பீரோ கிடையாது. ஒவ்வொரு முறை நாம் ஒன்றை நினைத்துப் பார்க்கும்போதும்,
மூளை அதைத் துண்டு துண்டாகச் சேர்த்து மீண்டும் உருவாக்குகிறது. இதற்கு மெமரி ரீகன்சாலிடேஷன்
என்று பெயர்.
இப்போது
மெமரி டெலீட்டிற்கான சில ஜன்னல்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. அதன் மூலம் நினைவில் சில
மாற்றங்களைச் செய்ய முடியும். ஒரு பழைய ஜி.பி.எஸ் மேப்பில் ரூட்டை மாற்றுவது போல, ஒரு
கசப்பான நினைவின் வீரியத்தை மட்டும் குறைக்க
முடியும்.
ஆராய்ச்சியாளர்கள்
இதற்காகப் ப்ரோப்ரானோலோல் என்ற ரத்த அழுத்த மருந்தைப் பயன்படுத்துகிறார்கள். இது மூளையின்
அமிக்டலா பகுதியில் சுரக்கும் ஸ்ட்ரெஸ் ஹார்மோனைத் தடுக்கிறது.
2015
இல் பாரிஸ் பயங்கரவாதத் தாக்குதலில் தப்பியவர்களுக்கு இந்தச் சிகிச்சையை அளித்துப்
பார்த்தார்கள். விளைவு? அவர்கள் அந்தச் சம்பவத்தை மறக்கவில்லை. ஆனால், அந்த நினைவுகள்
தரும் வலி மட்டும் குறைந்துவிட்டது. ஒரு பழைய எக்ஸ் காதலியைப் பற்றி நினைப்பது போலத்தான்
இது. நினைவு இருக்கும், ஆனால் அந்த வலி இருக்காது என்கிறார்கள்.
இது
குறித்துப் பயனர்களின் புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன தெரியுமா?
நினைவுகளை
மாற்றும் மருந்தை எடுத்துக்கொள்ளும் சாய்ஸ் மக்களுக்கு இருக்க வேண்டும் என்கின்றனர்
ஐம்பது சதவீதத்தினர்.
நீங்கள்
அந்த மருந்தை எடுத்துக்கொள்வீர்களா? என்ற கேள்விக்கு இருபது சதவீதத்தினரே ஓ.கே சொல்கின்றனர்.
ஆச்சரியமாக,
பலருக்கு நினைவுகளை மாற்ற விருப்பமில்லை. கசப்பான நினைவுகளும் நான் யார் என்பதைத் தீர்மானிக்கின்றன
என்று மக்கள் நினைக்கிறார்கள் போல!
எந்தத்
தீமையிலும் நன்மை இருப்பது போல, இது போன்ற நன்மையிலும் தீமை இல்லாமல் இருக்குமா? இதிலிருக்கும்
ஆபத்துகள் என்று பார்த்தால், இப்படி சில கேள்விகள் எழுப்பப்படுகின்றன. அவற்றை ஒவ்வொன்றாகப்
பார்த்து விடுவோம்.
ஒரு
குற்றத்தைச் செய்தவன் அல்லது சாட்சி சொல்பவன் தன் குற்ற உணர்ச்சியை அல்லது நினைவை அழித்துவிட்டால்,
சட்டம் எப்படித் தண்டிக்கும்?
நாஜிக்களின்
கொடுமையால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த நினைவுகளை அழித்துக்கொண்டால், உலகம் அந்தப் பாடத்தை
எப்படிப் படிக்கும்?
கோபம்,
அழுகை, வருத்தம் என இவையெல்லாம் மனிதனின் அடையாளங்கள். ஒரு மாத்திரை போட்டு இதையெல்லாம்
துடைத்துவிட்டால், நாம் வெறும் ரோபோக்களாக மாறிவிடமாட்டோமா?
ஆக,
நினைவுகளை அழிப்பது என்பது ஒரு கூர்மையான கத்தி. ஒரு போர் வீரனின் மன அழுத்தத்தைக்
குறைக்க இது தைலம். ஆனால், சின்னச் சின்னத் தோல்விகளுக்கெல்லாம் மாத்திரை போட ஆரம்பித்தால்,
நாம் எதையுமே கற்றுக்கொள்ள மாட்டோம்.
மறதி
ஒரு வரம் என்பது கவிதை. ஆனால் தேவையானதை மட்டும் மறப்பது என்பது விஞ்ஞானம்.
மொத்தத்தில்
அது வரமா அல்லது சாபமா என்பதைத் தீர்மானிக்க வேண்டியது நாம்தான்!
மெமரி
டெலீட் இஸ் யுவர் சாய்ஸ்!
*****

No comments:
Post a Comment