மனமும் பிரிட்ஜிக்குள் இருக்கும் தக்காளியும்!
பயம்
என்பது ஒரு முன்யோசனை முத்தண்ணா. வண்டி ரிப்பேர் ஆவதற்கு முன்பே சர்வீஸ் செய்ய நினைப்பது
புத்திசாலித்தனம்தான். ஆனால் வண்டியே இல்லாதபோது, வருங்காலத்தில் டயர் பஞ்சர் ஆனால்
என்ன செய்வது என்று யோசிப்பவன் முத்தண்ணா அல்ல, பித்தண்ணா.
நமது
மூளைக்குள் ஒரு முத்தண்ணா வகை செக்யூரிட்டி இருக்கிறான். அவனுக்கு ஓவர் டைம் டூட்டி
கொடுத்தால் என்னவாகும்? அவன் தூங்க மாட்டான், உங்களையும் தூங்க விடமாட்டான். அவன் போடும்
அலாரம்தான் அச்சுறுத்தல். ஐயோ என்னவாகப் போகிறதோ என்கிற ஆர்ப்பாட்டம்.
இந்த
முத்தண்ணாவால் நமக்கு இன்று இருப்பதை விட, நாளை என்ன நடக்கும் என்கிற கவலைகள்தான் அதிகம்.
பையன் பாஸ் செய்வானா? இ.எம்.ஐ கட்ட முடியுமா? ரோபோக்கள் நம் வேலையைப் பிடுங்கிக் கொள்ளுமா?
இப்படி இதற்கு ஓர் எல்லையே கிடையாது.
உண்மையில்
ஆபத்து இன்னும் வரவில்லை. ஆபத்து வருவதாக ஒரு மாய பிம்பம். அதாவது, வராத மழையை நினைத்து
இப்போதே குடை பிடித்துக்கொண்டு வெயிலில் நடப்பது போன்ற முட்டாள்தனம்.
பிரச்சனை
வெளியே இருக்கிறது. ஆனால், நாம் தீர்வை எங்கே தேடுகிறோம்? நம்முடைய மண்டைக்குள்! தீர்வு
அங்கிருந்து வர வேண்டும்தான். ஆனால் கிணறு வெட்டப் போய் பூதம் கிளம்பிய கதையாய், கவலைகளும்
பயங்களும் கிளம்பி வந்தால்?
மேனேஜர்
திட்டுகிறார் என்பது உண்மையான பிரச்சனை.
உள்ளே,
அதாவது மனதிற்குள்ளே, அவர் ஏன் திட்டினார்? நாளைக்கு வேலைக்கு ஆப்படித்து விடுவாரோ?
வேறு வேலை கிடைக்குமா? கையில் காசு இல்லையே? என்பதெல்லாம் முத்தண்ணா கிளப்பி விடும்
கன்னா பின்னா ஐயிட்டங்கள்.
இந்தத்
தீர்வுகள் எல்லாமே ரீப்பீட் மோடில் சுற்றக் கொண்டிருப்பவை. ஒரு கேள்வி, அதற்கு ஒரு பயம், அந்தப் பயத்தைப் போக்க
இன்னொரு கற்பனைத் தீர்வு, கடைசியில் தீர்வு
கிடைக்காது, பிபி, டென்சன், டிப்ரசன்தான் கிடைக்கும்.
பிரச்சனைகளுக்கு
முத்தண்ணா டைப்பில் மனதிற்குள் தீர்வு தேடுவது என்பது, இருட்டில் இல்லாத கருப்புப்
பூனையைத் தேடுவது போன்றது. அதுவும் அந்தப் பூனை கடிக்கப் போகிறது என்று பயந்து கொண்டு!
நாம்
ஏன் இப்படிச் செய்கிறோம்? மனித இனம் தப்பிப் பிழைக்க இது தேவைப்பட்டது. ஆதிமனிதன் புதர்
அசையும்போது புலி வருமோ என்று பயந்ததால்தான் இன்று நாம் இருக்கிறோம். ஆனால் இன்று புதர்
அசைவது ஏசி காற்றால் என்று தெரிந்தும், நம் மூளை பூகம்பம்தான் வருகிறது என்று அலெர்ட்
ஆறுமுகமாகிறது.
வருங்காலத்தைப்
பற்றி யோசிப்பதில் தப்பில்லை. ஆனால் அதையே ஒரு பிரச்சனையாக்கி, உள்ளுக்குள்ளேயே மல்யுத்தம்
செய்வதுதான் வொர்க் அவுட் ஆகாத விஷயம். எதார்த்தம் என்பது வெளியே இருக்கிறது. போய்
கதவைத் திறந்து பாருங்கள், உலகம் அழகாக இருக்கிறது!
என்ன
செய்யலாம்?
ஒரு
குட்டித் தூக்கம், சிறு நடைபயணம், ஒரு டீ இருக்கிறதா? குடியுங்கள். ஏதாவது ஒரு பஸ்
வருகிறதா? கை நீட்டி ஏறி ஒரு ரவுண்ட் போய் விட்டுத் திரும்புங்கள். பிரெஸ்ஸாகி விடுவீர்கள்.
இன்னும் ஏன் நீங்கள் பிரிட்ஜ்க்குள் கிடந்து அழுகவும் முடியாமல், ஜாமும் ஆக முடியாமல்
தவிக்கும் தக்காளியைப் போல இருக்க வேண்டும்?
வருவது
வரும் போது வரட்டும். இப்போது நிகழ்காலம் கையில் இருக்கிறது. லெட்ஸ் டேக் இட் அன்ட்
டேஸ்ட் இட். எதிர்காலத்தை நினைத்து டோன்ட் வேஸ்ட் இட்?
*****

No comments:
Post a Comment