31 Aug 2022

கவிதையாற்றுப்படை

கவிதையாற்றுப்படை

அநீதியைக் கண்டால் பொங்கி எழுகிறாய்

அக்கிரமங்களைக் கண்டால் நரம்பு துடிக்கிறது

லஞ்சம் ஊழல் என்றால் நெருப்பாகி எரிகிறாய்

தவறுகளைத் தட்டிக் கேட்க வேண்டுமென்று

இன்ஜின் வேகத்தில் இதயத்தைத் துடிக்க செய்கிறாய்

நீ பாட்டுக்கு நீ செய்வதுதான் சரியென்று

செய்து விட்டு வீடு திரும்புகிறாய்

நாங்களன்றோ இரத்த அழுத்தம் பார்த்து

மாத்திரை வாங்கி வந்து போட வைத்து

அவ்வபோது இசிஜிக்கு ஏற்பாடு செய்து

நடுராத்திரியில் டாக்சியில் டாக்டரை வரவழைத்து

எதுவும் முடியாத போது ஆம்புலன்ஸில் ஏற்றி

பணிவிடை பணிக்கைகள் சிரம பரிகாரங்கள் பண்ணி

அழுது புலம்பி ஏதேதோ அரற்றி

ஊரார் கேட்பதற்கு உளறிக் கொட்டி

எதுவும் செய்ய முடியவில்லை என்றால்

பேசாமல் இரேன்

நடப்பவை எல்லா காலமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன

முடிந்தவர்கள் முடிந்ததைச் செய்வார்கள்

முடியுமானால் சில நாட்கள்

கவிதைகள் எழுதுவதை நீயேன் நிறுத்திப் பார்க்கக் கூடாது

எதையாவது வாசிக்க அலைபவர்கள்

கொஞ்ச காலம் நிம்மதியாக இருந்து தொலையட்டும்

நாங்களும்தான்

*****

அக்கினி பிரவேசம்

அக்கினி பிரவேசம்

திடீரென முளைத்து விடும் காளானைப் போல

சண்டையொன்று முளைத்து விடும் போது

பாவம் டீக்கடைக்காரர்

எத்தனை கிளாஸ்கள் உடையுமோ

பாட்டில்கள் எத்தனை மீதமாகுமோ

பண்டங்களைச் சிதறாமல் பாதுகாக்க வேண்டுமோ

அக்கினி குஞ்சொன்றை

ஆத்திரத்தில் யாராவது கைப்பற்றி விட்டால்

வெந்து தணிந்தது டீக்கடை என்று

டீக்கடைக்காரர் தகிடத்தத்தோம் போட வேண்டியதுதான்

அரசியல் பேசாதீர் என்று எழுதிதான் வைத்திருக்கிறார்

அதைப் படிப்பார் யார்

பெஞ்சுப் பலகையோ பலகை பெஞ்சோ

அதில் போட்டிருக்கும்

தினத்தந்தியை மட்டும் படித்து விட்டு

காசு கொடுக்காமல் கணக்கெழுதிக் குடித்த டீயில்

சுறுசுறுப்பு ஏற்றிக் கொண்டு

பாய்லர் நெருப்பினும் பெருஞ்சூட்டுக்

கோபக்கனல் கொண்டு எரியூட்டியதில்

அன்று எரிந்து போனது

டீக்கடைக்காரரின் அக்கௌண்ட் நோட்டும்தான்

*****

Why don't you save on hunger?

 


Why don't you save on hunger?

Saving is a good habit. Savings can help in times of crisis. Savings can also help to avoid crises.

We save money. We save on costs. We save for jewelry. We are saving for home. We save to buy the things we want.

You can also save your hunger for your health. How to save hunger? You sit down to eat. If you can eat five Idlies for your hunger, eat four Idlies. Hunger for a leftover Idlies is stored there.

If your hunger is 100% then you should eat to 60% of your hunger. Even if it is not possible, do not eat more than eighty percent of hunger.

When your hunger needs are 100%, your food needs are only 60 to 80%.

Three meals a day is twenty one meals a week. This is the maximum food. Eating snacks in between can lead to overeating.

It would be better if you could eat eighty percent of your hunger and save twenty percent of your hunger every time you eat. If that is not possible, reduce the amount of food that is twenty one meals a week by twenty percent. That means cut down on four meals. Stop at any of your favorite four-day meals one time.

This habit will keep you away from all kinds of diseases caused by overeating.

There is no other amazing healing method like saving hunger. And there is no cost for this medical procedure. Instead, this method saves you food costs also.

*****

ஏன் நீங்கள் பசியைச் சேமிக்கக் கூடாது?

 


ஏன் நீங்கள் பசியைச் சேமிக்கக் கூடாது?

சேமிப்பு ஓர் அருமையான பழக்கம். நெருக்கடியான நிலமைகளில் சேமிப்புதான் கைகொடுக்கும். நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கும் சேமிப்பு பக்கபலமாக இருக்கும்.

பணத்தைச் சேமிக்கிறோம். செலவுகளைச் சிக்கனப்படுத்திச் சேமிக்கிறோம். நகைக்காகச் சேமிக்கிறோம். வீட்டிற்காகச் சேமிக்கிறோம். விருப்பமான பொருட்களை வாங்கச் சேமிக்கிறோம்.

உங்கள் உடல் நலத்திற்காகப் பசியையும் சேமிக்கலாம். அதெப்படி பசியைச் சேமிப்பது? சாப்பிட அமர்கிறீர்கள். உங்கள் பசிக்கு ஐந்து இட்டிலிகளைச் சாப்பிடலாம் என்றால் நீங்கள் நான்கு இட்டிலிகளைச் சாப்பிடுங்கள். மீதமுள்ள ஒரு இட்டிலிக்கான பசி அங்கே சேமிக்கப்படுகிறது.

உங்கள் பசி நூறு சதவீதம் என்றால் நீங்கள் அறுபது சதவீத பசிக்குச் சாப்பிடுவதே போதுமானது. அது முடியாது போனாலும் எண்பது சதவீத பசிக்கு மேல் சாப்பிடாதீர்கள்.

உங்களது பசித் தேவை நூறு சதவீதம் எனும் போது அதற்கான உணவுத் தேவை அறுபதிலிருந்து எண்பது சதவீதம் மட்டுமே.

ஒரு நாளுக்கு மூன்று வேளை உணவு என்றால் ஒரு வாரத்துக்கு இருபத்தொரு வேளை உணவு. இதுவே அதிகபட்ச உணவுதான். இதற்கு இடையில் சிற்றுண்டிகளை உண்பது மிக மிக அதிகபட்சமான உணவு உண்பதில் சேரும்.

உங்களால் ஒவ்வொரு முறை உணவு உண்ணும் போதும் எண்பது சதவீத பசி அளவுக்கு உண்டு இருபது சதவீத பசி அளவைச் சேமிக்க முடிந்தால் நல்லது. அது முடியாது போனால் வாரத்தின் இருபத்தொரு வேளை என்றிருக்கும் உணவு அளவில் இருபது சதவீத்தைக் குறையுங்கள். அதாவது நான்கு வேளை உணவைக் குறையுங்கள். உங்களுக்குப் பிடித்தமான நான்கு நாட்களில் ஏதேனும் ஒரு வேளை உணவை நிறுத்துங்கள்.

இந்தப் பழக்கம் மிகு உணவினால் உண்டாகும் அனைத்து விதமான நோய்களையும் அணுகாமல் உங்களைக் காக்கும்.

உணவைக் குறைப்பது போன்ற அற்புதமான மருத்துவ முறை வேறு எதுவும் இல்லை. மேலும் இந்த மருத்துவ முறைக்காகச் செலவு செய்வதில்லை. மாறாக உங்கள் உணவுச் செலவை இந்த முறை சேமித்துத் தருகிறது.

*****

ஒரு சம்சாரியின் கதா

ஒரு சம்சாரியின் கதா

மகனால் ஒரு பிரச்சனையில்லை

மார்க் குறைவாக வாங்கி

அப்பாவின் மன உளைச்சலை அதிகரிக்க வேண்டாமென்று

அவனாகவே கையெழுத்துப் போட்டுக் கொள்கிறேன்

மனைவியாலும் ஒரு பிரச்சனையில்லை

அவளாகவே தெரியாமல் கடன் வாங்கி

அவளுக்கே தெரியாமல் அடைத்து விடுகிறாள்

அப்பாவும் அம்மாவும் சளைத்தவர்களா

அரசாங்க ஆஸ்பத்திரிக்கு படையெடுத்து

சுகருக்கும் பிரசருக்கும் மருந்து வாங்கிக் கொள்கிறார்கள்

அக்கம் பக்கத்தாலும் பிரச்சனையில்லை

கடன் கொடுப்பார்கள்

கொடுத்த கடனுக்கு

டிவியோ பிரிட்ஜோ மிக்ஸியோ டூவீலரோ

வேண்டியதை வேண்டும் போது தூக்கிக் கொள்கிறார்கள்

என்னால்தான் எப்போதும் பிரச்சனை

மேனேஜர் கையெழுத்தை ஒரிஜினலாகப் போட

இன்னும் வரவில்லை

இன்ஸ்டால்மெண்ட் வசூலிப்பவன் கண்ணில் படாமல்

ஒளியத் தெரியவில்லை

நான்கு கடைகள் ஏறி இறங்கி

கடைக்கு இரண்டென தூக்க மாத்திரைகள்

வாங்க வேண்டியதாக இருக்கிறது

பக்கத்துப் பக்கத்து டேபிள்களில் வாங்கிய கடனுக்கு

தலைமறைவாய் வாழ வேண்டியிருக்கிறது

குடும்பத்தில் இருப்போரின் சாமர்த்தியங்களில்

ஒருத்தரின் சாமர்த்தியமாவது

கொஞ்சம் கைகூடியிருக்கலாம் அல்லவா இந்தச் சம்சாரிக்கு

*****

எண்ணெயும் பிண்ணாக்கும்

எண்ணெயும் பிண்ணாக்கும்

எனக்கு போண்டா

அண்ணனுக்கு சமோசா

அம்மாவுக்கு வடை

அப்பாவுக்கு கார பகோடா

தாத்தாவுக்கு எப்போதும் மெது பகோடா

பாட்டிக்குச் சுழியம்

அக்காவுக்குப் பஜ்ஜி

வாழையின் தோலை உரித்துப் போடும்

வாழைக்காய் பஜ்ஜி

தின்னும் முன் ஒரு பேப்பரில் வைத்துப் பிழிந்து கொள்வாள்

இருபது மில்லி எண்ணெய் தேறும்

பிண்ணாக்குப் பஜ்ஜியைத் தின்று கொள்வார்

ஆட்டிய எண்ணெயை தலைக்குத் தடவிக் கொள்வாள்

நாங்கள் எல்லாரும் ஏமாளிகள்

எங்கள் பண்டத்தில் எப்படிப் பிழிந்தாலும்

பிண்ணாக்கும் தேறாது எண்ணெயும் வாராது

*****

30 Aug 2022

Feel good movies and their story fields

Feel good movies and their story fields

There is always a demand for feel good books, feel good quotes, feel good events and feel good movies.

Every man's hope consists in the expectation that something will happen which creates feel good.

What Tenkachi Swaminathan has spoken and written are feel good qoutes and feel good books.

Events organized by former President and nuclear scientist Abdul Kalam to interact with students are all evidence of feel good events.

Most of the films directed by Vikraman in Tamil cinema are feel good films. His 'Vanathai Pola' is a good example of feel good movie.

Many people are celebrating the recent release of Dhanush's movie 'Trichirtambalam' as a feel good movie.

You might ask, what kind of feel good does grandfather and grandson sit down and drink alcohol together? Change of time and change of generations have added drinking alcohol to the list of good habits. It could also be a scene taken by the director to show the deep sense of understanding between grandfather and grandson.

The story should also be strong in the feel good films. Movies that emphasize the superiority of family and relationships in a strong narrative become feel-good movies.

A film's story of rapport can also be woven through family and community relationships that provide hope and fulfillment. Such plot twist can be seen in most of Vishu's films.

Now-a-days, if you have relationships like grandfather, grandmother, mother, father, brother, sister, sister, uncle, cousin, then the movie will come together as a feel good  film. Even the story is secondary.

When a feel good film is made with a strong story, its impact will last forever. Movies like ‘Pasamalar’ belong to that genre.

It is true that there is a sense of feel good harmony in the movie 'Thirchirtambalam'. You have to find where the story is. It has to be said that the film needs to progress a little bit more in terms of story, apart from telling a story that suits the times, which is a little different in the strategy used by the sympathetic film directors like Vikraman.

*****

நல்லுணர்வு திரைப்படங்களும் அவற்றின் கதைக்களங்களும்

நல்லுணர்வு திரைப்படங்களும் அவற்றின் கதைக்களங்களும்

நல்லுணர்வு புத்தகங்கள், நல்லுணர்வு வாசகங்கள், நல்லுணர்வு நிகழ்வுகள் மற்றும் நல்லுணர்வு திரைப்படங்களுக்கான தேவை எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கிறது.

ஒவ்வொரு மனிதரின் நம்பிக்கையும் நல்லுணர்வை உருவாக்கும் ஏதோ ஒன்றோ நடந்து விடாத என்ற எதிர்பார்ப்பில்தான் அடங்கியிருக்கிறது.

தென்கச்சி சுவாமிநாதன் பேசியதும் எழுதியதும் நல்லுணர்வு வாசகங்களுக்கும் மற்றும் நல்லுணர்வு புத்தகங்களுக்குக்கும் நல்லதொரு சான்று.

முன்னாள் குடியரசுத் தலைவரும் அணு ஆய்வாளருமான அப்துல் கலாம் மாணவர்களோடு உரையாட ஏற்பாடு செய்த நிகழ்வுகள் அனைத்தும் நல்லுணர்வு நிகழ்வுகளுக்குச் சான்று.

தமிழ்த் திரையுலகில் விக்ரமன் இயக்கிய திரைப்படங்கள் பெரும்பாலானவை நல்லுணர்வு வகைத் திரைப்படங்கள். அவரது ‘வானத்தைப் போல’ நல்லுணர்வு திரைப்படத்துக்கு நல்லதொரு சான்று.

அண்மையில் தனுஷ் நடித்து வெளிவந்திருக்கும் ‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தை நல்லுணர்வு திரைப்படங்கள் என்று பலரும் கொண்டாடுகின்றனர்.

தாத்தாவும் பேரனும் உட்கார்ந்து மது அருந்துவது என்ன வகை நல்லுணர்வோ என்று நீங்கள் கேட்கலாம். கால மாற்றமும் தலைமுறை மாற்றமும் மது அருந்துவதை நல்லுணர்வின் பட்டியல் இணைத்து விட்டதோ என்னவோ. தாத்தா – பேரனுக்கிடையே இருக்கும் ஆழ்ந்த புரிதல் உணர்வை நல்லுணர்வாகக் காட்ட இயக்குநர் மேற்கொண்ட காட்சியமைப்பாகவும் அது இருக்கலாம்.

நல்லுணர்வு திரைப்படங்களில் கதையும் வலுவாக அமைந்திருக்க வேண்டும். வலுவான கதையில் குடும்பம் மற்றும் உறவுகளின் மேன்மையை வலியுறுத்தும் திரைப்படங்கள் நல்லுணர்வு திரைப்படங்களாக ஆகி விடும்.

நம்பிக்கையையும் நிறைவையும் தரும் குடும்ப மற்றும் சமூக உறவுகளைக் கொண்டும் நல்லுணர்வு திரைப்படங்களின் கதையைப் பின்ன முடியும். விசுவின் பெரும்பாலான திரைப்படங்களில் இத்தகைய கதைப் பின்னலைக் காண முடியும்.

இப்போதெல்லாம் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, மாமா, மச்சான் என்று உறவுகளைக் கொண்டிருந்தாலே அந்தத் திரைப்படம் நல்லுணர்வு பட வகையில் சேர்ந்து விடுகிறது. கதை கூட இரண்டாம் பட்சம்தான்.

ஒரு வலுவான கதையோடு ஒரு நல்லுணர்வு திரைப்படம் அமைக்கப்படும் போது அது தரும் தாக்கம் காலம் கடந்து நிற்கும். பாசமலர் போன்ற திரைப்படங்கள் அந்த வகையைச் சார்ந்தவை.

‘திருச்சிற்றம்பலம்’ திரைப்படத்தில் ஒரு நல்லுணர்வு இழையோடுவது உண்மையே. கதையைத்தான் எங்கே இருக்கிறது என்று தேட வேண்டியிருக்கிறது. விக்ரமன் போன்ற நல்லுணர்வு திரைப்பட இயக்குநர்கள் கையாண்ட உத்தியில் சற்றே மாறுபட்டு காலத்திற்கேற்ற ஒரு கதையைச் சொல்வதன்றி கதையளவில் அந்தத் திரைப்படம் இன்னும் கொஞ்சம் முன்னேற வேண்டியிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.

*****

A Preference Chart of the Average Person

A Preference Chart of the Average Person

You always like celebrities. The media only asks them what they like and what they don't like. A special interest of most people is to know the likes and dislikes of celebrities. Although this curiosity is like eavesdropping on the secrets of the next door, I agree that humanity cannot let go of such curiosity so easily.

I have wondered why our people are not interested in knowing the preference maps of the average person. Maybe it's because we don't make it like a media story. So it seems that something should be done to make everyone aware of the preferences of the average person. I think this custom map serves that purpose. Please review this and give your feedback to improve this custom map.

Favorite Lyricist : Free mind composing grand poet Thambuswamy Thattha

Desired place to go: Like everyone else's theater i.e. cinema theatre

A place you don't want to go to: It's a theater like everyone else, that is, an operation theater

Favorite Food: Liquor items and pickles, rarely a mouthful of Protta and salna and the occasional candied oranges, Kamarcuts.

Favorite Book : Almanac, Jupiter Transit Benefits, Saturn Transit Benefits (No years of not buying. Something is done by us for book development)

Favorite Food : Old rice and green chillies, occasional touch of dried fish gravy.

Will this ocean of humanity ever give importance to the preferences of the average person? O my world of history, you must answer.

*****

சராசரி மனிதரின் விருப்ப வரைபடம்

சராசரி மனிதரின் விருப்ப வரைபடம்

எப்போதும் பிரபலங்களைத்தான் உங்களுக்குப் பிடிக்கும். அவர்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்று ஊடகங்கள் அவர்களை அவர்களை மட்டும்தான் கேட்கின்றன. பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் தனித்த ஆர்வமும் என்னவென்றால் பிரபலங்களின் விருப்பு வெறுப்புகளை அறிந்து கொள்வது. இந்த ஆர்வம் என்பது அடுத்த வீட்டு ரகசியங்களை ஒட்டுக் கேட்பது போலத்தான் என்றாலும் இது போன்ற ஆர்வங்களை மனித குலம் அவ்வளவு எளிதில் விட்டு விட முடியாது என்பதையும் ஏற்றுக் கொள்கிறேன்.

ஏன் நம் மக்கள் சராசரி மனிதர்களின் விருப்ப வரைபடங்களை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்ட மாட்டேன்கிறார்கள் என்று யோசித்திருக்கிறேன். நாம் அதை ஊடகச் செய்தி போல ஆக்காதது கூட ஒரு காரணமாக இருக்கலாம். அதனால் சராசரி மனிதர்களின் விருப்பங்களையும் அனைவரும் அறிந்து கொள்ள ஏதேனும் செய்ய வேண்டும் என்று தோன்றுகிறது. இந்த விருப்ப வரைபடம் அந்த நோக்கத்தைப் பூர்த்தி செய்யும் என்று நினைக்கிறேன். இதைப் பார்த்து விட்டு நீங்களும் உங்கள் கருத்துகளைச் சொன்னால் இந்த விருப்ப வரைபடத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

பிடித்த பாடலாசிரியர் : இட்டுக்கட்டிப் பாடும் தெருமுக்கு தம்புசாமி தாத்தா

போக ஆசைப்படும் இடம் : எல்லாரையும் போல தியேட்டர் அதாவது சினிமா தியேட்டர்

போக ஆசைப்படாத இடம் : அதுவும் எல்லாரையும் போல தியேட்டர் அதாவது ஆபரேஷன் தியேட்டர்

விருப்பமான உண்பண்டம் : சரக்கும் ஊறுகாயும், அபூர்வமாக சில சமயங்களில் வாய்க்கும் தொடுகறி மற்றும் அவ்வபோது கமர்கட்டும் ஆரஞ்சு மிட்டாயும்

பிடித்த புத்தகம் : பஞ்சாங்கம், குரு பெயர்ச்சி பலன்கள், சனி பெயர்ச்சி பலன்கள் (வாங்காத வருடங்கள் இல்லை. ஏதோ புத்தக வளர்ச்சிக்கு நம்மால் ஆனது)

பிடித்த உணவு : பழைய சாதமும் பச்சை மிளகாயும், எப்போதாவது தொட்டுக்கொள்ள வாய்க்கும் கருவாட்டுக் குழம்பு.

இனிமேலாவது இந்த மானுடச் சமுத்திரம் சராசரி மனிதர்களின் விருப்பத் துளிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமா? ஓ என் சரித்திர பூகோளமோ நீதான் விடை சொல்ல வேண்டும்.

*****

29 Aug 2022

Time That Belongs To You

Time That Belongs To You

There are many reasons why you should wake up early in the morning. The important reason is that we have that early morning time in our hands. No one can take it away.

The hours that follow the morning hours are rarely ours.

Daily chores, regular duties, labor for wages, mandatory responsibilities, etc., have to be shared with the rest of the time.

Especially phone calls. There is no guarantee that any call will be received at any time. Compulsions to act upon those calls are emerging.

Once we start running for a task, time is not in our control until the task is completed.

That's why I say, early morning hours are our time without any distractions.

We should not spend that time sleeping when no one can disturb us. Because you can never get that kind of free time later in a day.

*****

உங்களுக்கே உங்களுக்கேயான நேரம்

உங்களுக்கே உங்களுக்கேயான அதிகாலை நேரம்

ஏன் காலையில் எழ வேண்டும் என்பதற்குப் பல காரணங்கள் சொல்லலாம். முக்கியமான காரணம் அந்த அதிகாலை நேரம் நம் கையில் இருப்பது. யாராலும் பிடுங்கிக் கொள்ள முடியாதது.

அதிகாலை நேரத்தைத் தொடர்ந்து வரும் மற்ற நேரங்கள் நமக்கானவையாக இருப்பது அபூர்வம்.

அன்றாட வேலைகள், வழக்கமான கடமைகள், ஊதியத்திற்கான உழைப்பு, கட்டாயம் செய்து ஆக வேண்டிய பொறுப்புகள் என்று பலவற்றிற்கும் அதற்குப் பின்பான நேரத்தைப் பகிர்ந்து கொடுத்துக் கொண்டு இருக்க வேண்டியிருக்கும்.

குறிப்பாக அலைபேசி அழைப்புகள். எந்த நேரத்தில் எந்த அழைப்பு வரும் என்பதற்கு உத்திரவாதம் கிடையாது. அந்த அழைப்புகளுக்கு ஏற்றாற்போல் இயங்க வேண்டிய நிர்பந்தங்கள் உருவாகிக் கொண்டிருக்கும்.

ஒரு பணிக்காக இயங்க ஆரம்பித்து விட்டால் பிறகு அந்தப் பணி ஒரு முடிவுக்கு வரும் வரை நேரம் நம் கட்டுபாட்டுக்குள் வராது.

அதனால்தான் சொல்கிறேன், அதிகாலை நேரம் என்பது எந்தத் தொந்தரவுகளும் இல்லாத நமக்கேயான நேரமாகும்.

யாராலும் தொந்தரவு செய்ய முடியாத அந்த நேரத்தை நாம் உறங்கிக் கழிக்காமல் இருக்க வேண்டும். ஏனென்றால் அது போன்ற சுதந்திரமான நேரத்தை ஒரு நாளில் பிறகு வேறெப்போதும் உங்களால் பெற முடியாது.

*****

28 Aug 2022

The pool one day becomes a pool

The pool one day becomes a pool

Some say it's a dirty pool

Many others say it is a cesspool

Some people worry about mosquitoes’ outburst

That the pond can be cleaned and the septic tank built

Some say ideas

Have already pooped by the pool

That's what people do when they step into the pool

After the buffaloes died

To the pool where no one comes to bathe

There are steps on all four sides

A public pool will one day go unused

Water is a gift

Those who are in the pit to rise up

Will lift the bat and the ball

Teens play

Hold two jugs of water

If you wander around the four cities

That the pool has started to be used

*****

குளம் ஒரு நாள் குளமாகும்

குளம் ஒரு நாள் குளமாகும்

அழுக்குக் குளம் என்கிறார் சிலர்

சாக்கடைக் குளம் என்கிறார் வேறு பலர்

கொழுக்கள் புழுப்பதாகக் கவலை கொள்கிறார் சிலர்

குளத்தைத் தூர்த்து டாய்லெட் கட்டலாம் என்று

யோசனைகள் சொல்கிறார் சிலர்

ஏற்கனவே குளக்கரையில் மலம் கழித்து

குளத்தில் கால் அலம்பி அதைத்தான் செய்கிறார் மக்கள்

எருமைகள் செத்த பின்

யாரும் குளிக்க வராத குளத்துக்கு

நான்கு பக்கமும் படித்துறைகள் இருக்கின்றன

என்றாவது ஒரு நாள் பயன்படாமலோ போய் விடும் பொதுக்குளம்

நீர் வற்றும் கொடையில்

பள்ளத்தில் இருப்போர் மேடாக்கிக் கொள்ள

மட்டையையும் பந்தையும் தூக்கி வரும்

வாலிபச் சிறார்கள் விளையாட

இரண்டு குடம் தண்ணீர் பிடிக்க

நான்கு ஊர் அலைந்து பார்த்தால்

பயன்பட ஆரம்பித்து விடாதா குளம்

*****

சார்கள் இருந்த காலம்

சார்கள் இருந்த காலம்

இந்தப் பிள்ளைகள் நிறைய கேள்வி கேட்கிறார்கள்

டைனசோரைப் பார்த்திருக்கிறாயா

நிலவில் பாட்டி நூடுல்ஸ் செய்வாளா

இந்தப் பர்த்டேவுக்காகவாவது காஸ்ட்லி கிப்ட் உண்டா

நீ படித்த போது மிஸ்கள் இருந்தார்களா

ஹோம் ஒர்க்குகள் இருந்ததா

கணக்கில் சென்டம் அடித்தாயா

கேர்ள் பிரெண்ட் பாய் பிரெண்ட் எத்தனை

படிக்காமல் பரீட்சை எழுத முடியாதா

கவர்மெண்ட ஸ்கூலில் படிக்கக் கூடாதா

இப்படி எத்தனை கேள்விகள்

நான் ஒரு கேள்வியாவது கேட்க முடிகிறதா

எத்தனை மிஸ்கள் உங்கள் பள்ளியில் என்றால்

அம்மாவிடம் சொல்லி விடுவேன் என்கிறதுகள்

நாங்கள் படித்த போது சார்கள்தான் இருந்தார்கள்

என்ற ஏக்கத்தை யாரிடம் சொல்வேன்

*****

இந்தக் காலத்தில் காப்பி குடிப்பது இல்லை

இந்தக் காலத்தில் காப்பி குடிப்பது இல்லை

ஒரு நேரத்தில் மனம் ஆசைப்படுவதை எல்லாம் சாப்பிடுவது மகிழ்ச்சி தருவதாக இருந்தது. அப்படி சாப்பிட்டுச் சாப்பிட்டு இப்போது அளவோடு சாப்பிட்டால் போதும் என்ற முடிவுக்கு மனம் வந்து விட்டது.

ஒட்டலுக்குள் ஒற்றை ஆளாய் அமர்ந்து கொண்டு இரண்டு காப்பி சொல்லிய போது சர்வர் ஆச்சரியமாய்ப் பார்த்ததை இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.

வீட்டில் லோட்டா நிறைய, சொம்பு நிறைய காப்பி குடித்த எனக்கு ஓட்டலில் காப்பி கொடுப்பதற்கென்றே அளந்தெடுத்து வைத்த டம்பளரும் டபராவும் உவப்பானதாக இருந்ததில்லை. அதற்காக ஓட்டல் டம்ப்ளரையும் டபராவையும் லோட்டா அளவுக்கோ சொம்பு அளவுக்கோ மீள் உருவாக்கம் செய்ய முடியாது என்பதால் எனக்கு எப்போது ஓட்டல் சென்றாலும் இரண்டு காப்பி குடிக்கத் தோன்றும்.

இரண்டு என்பது கூட ஒருவித நாகரிகம் கருதித்தான். உண்மையில் ஓட்டல் காப்பி என்றால் எனக்கு பத்து காப்பி வரை குடிக்கத் தோன்றும். ஒற்றை ஆளாய் உட்கார்ந்து கொண்டு அப்படி பத்து காப்பி வாங்கிக் குடித்தால் அதை பார்ப்பவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்களோ என்று கூச்ச உணர்வால் இரண்டோடு நிறுத்திக் கொள்வேன்.

இரண்டு காப்பி வாங்கிக் குடிப்பதை வேடிக்கையாகப் பார்ப்பார்கள் எனும் போது பத்து குடித்தால் இது இன்னும் ரொம்ப வேடிக்கையாக இருக்கும். அது போன்ற நேரங்களில் எனக்குப் பத்துத் தலை ராவணனின் நினைவு வந்து விடும். அது போன்று பத்து தலைகள் இருந்தால் தைரியமாக பத்து காப்பிகள் கூச்சப்படாமல் வாங்கிக் குடிக்கலாம். அப்போது பத்து காப்பிகள் வாங்கிக் குடிப்பதை வித்தியாசமாகப் பார்க்க மாட்டார்கள். பத்துத் தலைகள் இருப்பதை வித்தியாசமாகப் பார்ப்பார்கள்.

பத்துத் தலைகளை வித்தியாசமாகப் பார்த்தாலும் பரவாயில்லை, பத்துத் தலைகளோடு போய் பத்து காப்பிகள் குடிக்க எனக்கு ஆசைதான்.

காப்பி மீது அலாதியான பிரியத்தோடு அப்படி இருந்த நான் இப்போது ரொம்பவே மாறி விட்டேன். காப்பி மட்டுமன்றி டீ குடிப்பதையும் நிறுத்தி பத்தாண்டுகளுக்கு மேல் ஓடி விட்டன.

ஒரு நேரத்தில் இரண்டு காப்பிக்குக் குறையாமல் குடித்த நான் திடுதிப்பென எப்படி நிறுத்த முடியும் என்று நீங்கள் கேட்கலாம். செயின் ஸ்மோக்கர் புகைப்பதை நிறுத்துவது போல இது ஓர் ஆச்சரியம்தான். காப்பி குடிப்பவர்களும் கிட்டதட்ட செயின் ஸ்மோக்கர் நிலையில் இருப்பவர்கள்தான். காப்பி குடிக்காவிட்டால் அவர்களுக்குக் காரியம் ஓடாது. மண்டை வெடித்து விடுமோ, பிரளயம் நேர்ந்து விடுமோ என்ற நினைப்பு கூட வந்து விடும்.

சாப்பாட்டு ருசியின் மேல் இருக்கும் மேல் ஆசையில் நான் காப்பி குடிப்பதை நிறுத்தினேன். இதன் தர்க்கம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று போலத் தோன்றலாம். என் மனம் அப்படி ஒரு தர்க்க்ததை ஏன் கற்பித்துக் கொண்டது என்பதற்கு என்னால் சரியான காரணத்தைத் தேடிச் சொல்ல முடியாமல் போகலாம். உத்தேசமாக ஒரு வாரியாகச் சொல்கிறேன்.

சாப்பாட்டின் ருசி சாப்பாட்டில் இருக்கலாம், இல்லாமல் இருக்கலாம். எல்லா நேரங்களிலும் ருசியான சாப்பாடு கிடைக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் கொடுக்க முடியாது. ருசியாகச் சமைப்பவரும் எல்லா நேரங்களிலும ருசியாகச் சமைப்பார் என்று சொல்ல முடியாது.

சாப்பாட்டின் ருசி நிரந்தரமாக எதில் இருக்கிறது என்று தேட ஆரம்பித்த பிறகு ருசியில்லாத சாப்பாடும் எப்போது ருசிக்கும் என்று பல மாதங்கள் தொடர் யோசனையில் இருந்தேன்.

ஒரு நாள் எனக்கான விடை கிடைத்தது. ஒரு வெளியூர் பயணம்தான் அந்த விடைக்கான அனுபவத்தைத் தந்தது.

அந்தத் தினத்தில் நண்பகல் பனிரெண்டு மணிக்கு நான் ஏறிய பேருந்து நடக்கத் தெரியாத தவழ்ந்து செல்லும் குழந்தையைப் போல உருண்டு உருண்டு போய்க் கொண்டிருந்தததில் பேருந்தை விட்டு இறங்கிய போது மணி இரண்டரை ஆகியிருந்தது.

அகோரப் பசியில் இருந்த நான் பேருந்தை விட்டு இறங்கியதும் எதிரில் இருந்த ஓட்டலுக்கு ஓடிச் சென்றேன். அந்த ஓட்டல் சாப்பாட்டை நான் ருசித்துச் சாப்பிட்டேன். எனக்கு அந்தச் சாப்பாடு ருசியாகத்தான் இருந்தது. சாப்பிட்டு வெளியில் வந்த பலரும் சாப்பாட்டில் ருசியில்லை, சாப்பாடும் சரியில்லை என்று பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சோடு பேச்சாக அந்த ஓட்டலைச் சகட்டு மேனிக்குத் திட்டவும் தொடங்கி விட்டார்கள்.

யாருக்குமே ருசிக்காத உணவு எனக்கு மட்டும் எப்படி ருசியோடு இருந்திருக்க முடியும்? பசிதான் அந்த ருசியைத் தந்திருக்கிறது என்பது புரிந்தது.

மதிய உணவுக்கான நேரம் நெருங்க நெருங்க பேருந்தில் இருந்த பலரும் தாங்கள் வாங்கி வைத்திருந்த நொறுக்குத் தீனிகளைத் தின்று கொண்டிருந்தார்கள். துரதிர்ஷ்டவசமாக நொறுக்குத் தீனிகள் ஏதும் வாங்காமல் பேருந்தில் இருந்த எனக்கு பசியோடு பயணித்துப் பசியோடு இறங்கியோடி அந்த ஓட்டலில் சாப்பிட வேண்டிய நிலைமை. பசியோடு உண்டால் ருசிக்காததும் ருசிக்கும் என்ற அந்த அனுபவம்தான் என்னை மாற்றிப் போட்டுக் கொள்ள காரணமாக இருந்தது.

பசியோடு இருந்தால் எப்பேர்பட்ட உணவும் ருசிக்கும் என்று தெரிந்த பின் மூன்று வேளை சாப்பிட்டாலும் பசியினால் ருசிக்கும் உணவைச் சாப்பிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டேன்.

சாப்பிடும் போது எனக்குப் பசிக்க வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது இப்போது உங்களுக்கே புரிந்திருக்கும். சாப்பாட்டுக்கு இடையில் உள்ள நேரங்களை நொறுக்குத் தீனியால் நிரப்பக் கூடாது என்பது எனக்குப் புரிந்தது.

அன்றிலிருந்து மூன்று வேளை உணவைத் தவிர இடையில் சிற்றுண்டியோ, டீயோ, காப்பியோ எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற முடிவுக்கு என்னை அறியாமல் என் மனம் வந்து விட்டது.

மூன்று வேளை உணவுக்கு இடையில் எடுக்கும் எந்த உணவும் அந்த நேரத்துப் பசியைப் போக்கலாம். நாவிற்கு இணையற்ற ருசியைத் தரலாம். ஆனால் அது மூன்று வேளை உணவை ருசியில்லாமல் ஆக்கி விடுகிறது என்ற முடிவுதான் என்னை டீ, காப்பி அணுக விடாமல் செய்து விட்டது. 

எனக்கு காலை – மதியம் – இரவு என்று மூன்று வேளை சாப்பிடும் உணவு ருசியாக இருக்க வேண்டும் என்ற ஆசையில் அதாவது அந்த உணவு ருசியில்லாமல் சமைக்கப்பட்டிருந்தாலும் எனக்கு ருசியாக இருக்க வேண்டும் என்ற பிரயாசையில் மூன்று வேளை உணவைத் தவிர இடையில் வேறு எதையும் சாப்பிடும் பழக்கத்தை அன்றிலிருந்து விட்டு விட்டேன்.

இப்படித்தான் நான் டீ குடிப்பதும், காப்பி குடிப்பதும், சிற்றுண்டி கொரிப்பதும் நின்று போனது. எப்போதாவது சில வற்புறுத்தல்களில் சில நேரங்களில் டீயோ, சிற்றுண்டியோ சாப்பிடும் நிலை வந்தாலும் என்னை வற்புறுத்தாமல், எனக்கு டீயோ, காப்பியோ, சிற்றுண்டியோ தராத உறவினர்களையும் நண்பர்களையும்தான் நான் அதிகம் நாடிச் செல்கிறேன்.

வீட்டிற்கு வந்தால் எதாவது சாப்பிட்டு விட்டுதான் செல்ல வேண்டும் என்று வற்புறுத்தும் நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீட்டுக்குச் செல்வதை அண்மை காலமாக நான் தவிர்த்துக் கொண்டு வருகிறேன்.

தன் வீட்டிற்கு வந்தும் என்னைப் பசியோடு அணுப்பும் நண்பர்களும் உறவினர்களும் என் பாக்கியத்திற்கு உரியவர்கள்.

நண்பர்கள், உறவினர்கள் வீடு என்றல்ல, யார் வீட்டுக்கும் நான் வரத் தயாராக இருக்கிறேன், ஆனால்…

உங்கள் வீட்டுக்கு வரும் போது என் வயிற்றுக்கு எதுவும் கொடுக்காமல் இருந்தால் மட்டுமே நான் வரத் தயாராக இருக்கிறேன் என்பதை மிகுந்த பணிவுடனும் பேரன்புடனும் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் விருந்தோம்பலை விடவும் எனக்கு அடுத்த வேளை உணவுக்குப் பசிக்க வேண்டும் என்பது முக்கியமாக இருக்கிறது.

*****

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம்

மனித மிருகத்துக்கான பல்லுயிர் பாடம் ஆயிரக்கணக்கான விதைகளை அனுப்பிக் கொண்டிருக்கும் மரம் அத்தனை விதைகளும் முளைக்க வேண்டும் என்றா ஆசைப...