31 Aug 2022

கவிதையாற்றுப்படை

கவிதையாற்றுப்படை

அநீதியைக் கண்டால் பொங்கி எழுகிறாய்

அக்கிரமங்களைக் கண்டால் நரம்பு துடிக்கிறது

லஞ்சம் ஊழல் என்றால் நெருப்பாகி எரிகிறாய்

தவறுகளைத் தட்டிக் கேட்க வேண்டுமென்று

இன்ஜின் வேகத்தில் இதயத்தைத் துடிக்க செய்கிறாய்

நீ பாட்டுக்கு நீ செய்வதுதான் சரியென்று

செய்து விட்டு வீடு திரும்புகிறாய்

நாங்களன்றோ இரத்த அழுத்தம் பார்த்து

மாத்திரை வாங்கி வந்து போட வைத்து

அவ்வபோது இசிஜிக்கு ஏற்பாடு செய்து

நடுராத்திரியில் டாக்சியில் டாக்டரை வரவழைத்து

எதுவும் முடியாத போது ஆம்புலன்ஸில் ஏற்றி

பணிவிடை பணிக்கைகள் சிரம பரிகாரங்கள் பண்ணி

அழுது புலம்பி ஏதேதோ அரற்றி

ஊரார் கேட்பதற்கு உளறிக் கொட்டி

எதுவும் செய்ய முடியவில்லை என்றால்

பேசாமல் இரேன்

நடப்பவை எல்லா காலமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன

முடிந்தவர்கள் முடிந்ததைச் செய்வார்கள்

முடியுமானால் சில நாட்கள்

கவிதைகள் எழுதுவதை நீயேன் நிறுத்திப் பார்க்கக் கூடாது

எதையாவது வாசிக்க அலைபவர்கள்

கொஞ்ச காலம் நிம்மதியாக இருந்து தொலையட்டும்

நாங்களும்தான்

*****

No comments:

Post a Comment

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை!

வாழ்நாள் முழுவதும் கற்றலை வலியுறுத்தும் ஔவை! ஔவைக்கு நூலறிவு மட்டும் கிடையாது. அவரது பட்டறிவுக்கு எல்லையே கிடையாது. ஒரு பெண்ணாகச் சுதந்த...